AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இனிமேல் உங்களால் ஆட்சிக்கு வர முடியாது.. – அமைச்சர் ஆனந்த் பேச்சால் பரபரப்பு

Anand Challenges Opposition : சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நாங்கள் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வோம். நீங்கள் நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். கனவு கண்டால்கூட இனிமேல் உங்களால் ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம் என பேசியது எதிர்கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

“இனிமேல் உங்களால் ஆட்சிக்கு வர முடியாது.. – அமைச்சர் ஆனந்த் பேச்சால் பரபரப்பு
அமைச்சர் என்.ஆனந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Aug 2026 14:37 PM IST

சென்னை, ஆகஸ்ட் 19 : சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நாங்கள் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வோம். நீங்கள் நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். கனவு கண்டால்கூட இனிமேல் உங்களால் ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம் என பேசியது எதிர்கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஆனந்த் பேச்சால் பரபரப்பு

தமிழக சட்டமன்றத்தில் இன்றைய நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது. அப்போது, தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என்றார். மேலும்,  நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்ப திரும்ப சொல்கிறேன் என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும், அதை திறக்க வைக்காதீர்கள்…. – முதல்வர் விஜய் பேச்சால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் என். ஆனந்த், திண்டுக்கல் மலைப்பகுதிகளில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவருடைய மாவட்டமான திண்டுக்கல் கொடைக்கானல் தாண்டிக்குடி என்ற ஊரில் கடந்த 2025 ஆம் ஆண்டு எங்கள் தலைவர் படப்பிடிப்புக்காக சென்றார்.

அப்போது அங்கு 255 பேர் தான் வாழ்கிறார்கள். 15 ஆண்டுகளாக அங்கு சாலை வசதி இல்லை. நம் சொந்த செலவில் போடலாம் என்றார். நம்மை பேனர் வைக்கவே விடவில்லை. எப்படி சாலை போட விடுவார்கள் என கேட்டேன். நம் ஆட்சிக்கு வந்தவுடன் போட்டுவிடலாம் என்றதும் சிரித்தார். நான் பதவியேற்ற 5வது நாள் தாண்டிக்குடி என்ற பகுதியில் சாலை போட வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்று ரூ.5 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, நீர்வளம் என்ற மிகப்பெரிய சொத்து நம் கண் முன்னே நம்மை விட்டு சென்றுக்கொண்டிருக்கிறது. எத்தனையோ ஏரி குளங்கள் ஆறுகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; இந்த சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்டால் எவ்வளவு வெள்ள நீரையும் நம்மால் சேர்த்து வைக்க முடியும் என்றார்.

இதையும் படிக்க : சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!

மேலும் பேசிய அவர், இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில்தான் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதிசயங்களில் ஒன்று. சென்னை கூவம் ஆறு மிகப்பெரி அதிசயம். கூவம் ஆறு ஆவடி, அம்பத்தூர் தாண்டி சென்னைக்கு வரும்போது ரசாயன கழிவு கலந்து சாக்கடையாக வருகிறது. நல்ல தண்ணீரில் சாக்கடை கலப்பது சட்டப்பட குற்றமாகும். கூவம் ஆற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை முதலில் தடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

Follow Us