AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென் மாநில முதல்வர்கள் மாநாடு – அமித் ஷாவை சந்திக்கும் முதல்வர் விஜய்

Southern States Chief Ministers Conference : அண்டை மாநிலங்களுடன் சுமூகமான உறவை பேணுவதற்காக மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 20, 2026 சென்னையை அடுத்த கோவளத்தில் தனியார் விடுதியில் நடைபெறவிருக்கிறது.

தென் மாநில முதல்வர்கள் மாநாடு – அமித் ஷாவை சந்திக்கும் முதல்வர் விஜய்
அமித் ஷா - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Aug 2026 08:00 AM IST

சென்னை, ஆகஸ்ட் 19 : தென் மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆகஸ்ட் 20, 2026 நாளை நடைபெறவிருக்கிறது. அண்டை மாநிலங்களுடன் சுமூகமான உறவை பேணுவதற்காக மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 20, 2026 சென்னையை அடுத்த கோவளத்தில் தனியார் விடுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அந்த பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வரும் அமித்ஷா

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19, 2026 இன்று மாலை சென்னை வருகிறார். அவருக்கு தமிழக அரசு மற்றும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த மாநாட்டின் போது முதல்வர் விஜய் அமித் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : அரசு பெண் ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..

இதற்கிடையில் நாளை நடைபெறும் மாநாடு தொடர்பாக ஆகஸ்ட் 19, 2026 இன்று இரவு 6 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நாளை இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தொழில் முதலீடுகள், நீர் பகிர்வு, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்னைகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு சார்பில் காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், முல்லை பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகல் குறி்த்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தொகுதி மறுவரையறை விவகாரமும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறையினால் தென் மாநிலங்களின் பிரதிநித்துவம் பாதிக்கப்படலாம் என அமித் ஷாவிடம் மாநில முதல்வர்கள் சார்பில் கவலை தெரிவிக்கவுள்ளனர். அதற்கு அவர் பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்

இதற்கிடையில் தமிழகம் வரும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனியாக சந்தித்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக காவிரி நதி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்லவிருந்தார். ஆனால் கன்னட அமைப்பினர் போராட்டம் தீவிரமாக இருந்ததால் முதல்வர் விஜய் கர்நாடகா வருவது சரியாக இருக்காது என அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார். இதனால் முதல்வர் விஜய்யின் கர்நாடகா பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us