AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாட்டில் 14 முதல்வர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் – பட்டியலில் இடம்பெற்ற முதல்வர் விஜய் – பரபரப்பு தகவல்

Chief Ministers Criminal Cases : நாடு முழுவதும் தற்போது பதவி வகித்து வரும் முதல்வர்களில் 14 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய்யும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 14 முதல்வர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் – பட்டியலில் இடம்பெற்ற முதல்வர் விஜய் – பரபரப்பு தகவல்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Aug 2026 13:52 PM IST

நாடு முழுவதும் தற்போது பதவி வகித்து வரும் முதல்வர்களில் 14 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய்யும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த அறிக்கயை மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கை நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏகள், எம்பிகள் ஆகியோருக்கு எதிராக 4, 192 வழக்குகள் நிலுவையில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 519 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!

யாருக்கு முதலிடம்?

இந்த பட்டியலில் 29 வழக்குகளுடன் மேற்கு வங்க முதல்வர் சுவேந்தி அதிகாரி 29 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் 19வது வழக்குகளுடன் 2வது இடத்திலும், அதே 19 வழக்குகளுடன் ஆந்திர முதல்வர் சந்திர பாபுவும் 2வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 18 வழக்குகளுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக 2 வழக்குகள்

இந்த பட்டியலில் தமிழக விஜய்க்கு எதிராக 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக 5 வழக்குகளும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிற்கு 5 வழக்குகளும், ஹிமாசல் முதல்வர் சுக்வீந்தர் சிங் 4 வழக்குகளும், பிகார் முதல்வர் சாம்ராத் சௌத்ரிக்கு எதிராக 2 வழக்குகளும், சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு எதிராக 1 குற்ற வழக்குகளும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக 1 வழக்குகளும், ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜி 1 வழக்குகளும் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா 1 வழக்கும் உள்ளன.

இதையும் படிக்க : இளைஞர் கன்னத்தில் அறைந்தது குறைந்தபட்ச பல பிரயோகம்.. எஸ்.ஐ.- இளைஞர் மோதல் சம்பவம் குறித்து காவல் துறை விளக்கம்!

அதே போல மாநிலங்களவை உறுப்பினர்களில் 75 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 40 வழக்குகள் கடும் குற்ற வழக்குகள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எம்எல்ஏ மற்றும் எம்பிகள் மீதான குற்றவியல் வழக்குகள் மீது விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றங்களை நியமிக்கவும், வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணிக்கவும் உயர் நீதிமமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us