இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும், அதை திறக்க வைக்காதீர்கள்…. – முதல்வர் விஜய் பேச்சால் பரபரப்பு
CM Vijay on Corruption Evidence : தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், மக்களிடம் எப்போது, என்ன, எப்படி பேச வேண்டும் என தெரியும். அதனால்தான் அன்புடன் இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.
சென்னை, ஆகஸ்ட் 19 : சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், மக்களிடம் எப்போது என்ன பேச வேண்டும் என்பது என தெரியும் என்றும் இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 19, 2026 இன்று சட்டமன்றத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிக் கொண்டிருக்கும்போது, தவெக, திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 74% மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் – மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சி தகவல்




முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு
இந்த நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், இங்கே ஆதாரம் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசும்போது, 3 துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருக்கின்றன என்றார். அனைத்து ஊழல்களும் ஆதாரங்களுடன் இருக்கின்றன. அதனை திறக்க வைக்காதீர்கள். எதை எப்போது திறக்க வேண்டுமோ, அதை அப்போது திறப்போம் என்றார்.
மேலும் பேசிய அவர், மக்களிடம் எப்போது, என்ன, எப்படி பேச வேண்டும் என தெரியும். அதனால்தான் அன்புடன் இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஐ. பெரியசாமி, அன்பு, ஆசையாக பேசிதான் ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளேன். இருமுறை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : வேகமாகக் குறையும் பிறப்பு விகிதம்..! ‘முதியோர் மாநிலமாக’ மாறும் தமிழ்நாடு.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்!!
சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி தமிழ்நாட்டில் புதிதாக 7 அரசு செவிலியர்கள் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார். தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருத்துவியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், திருநங்கையர்களுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றார்.