தமிழ்நாட்டில் 74% மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் – மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சி தகவல்
Tamil Nadu Obesity Crisis : உடல் பருமனே நம் பெரும்பாலான உடல் நலக்குறைபாடுகளுக்கு அடிப்படை காரணமாக விளங்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 74 சதவிகித மரணங்கள் இதய நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்புகள், சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 19 : தமிழ்நாட்டில் 44.2 சதவிகிதம் பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்ப்டடுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை தெரிவித்துள்ளது. மேலும் 38.8 சதவிகித ஆண்களும் உடல் பருமனால் அவதிக்குள்ளாகின்றனர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தமிழ்நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 74 சதவிகித மரணங்கள் இதய நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்புகள், சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 74% மரணங்களுக்கு காரணம் உடல் பருமன்
உடல் பருமனே நம் பெரும்பாலான உடல் நலக்குறைபாடுகளுக்கு அடிப்படை காரணமாக விளங்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக நாம் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் பாதிபேருக்கு உடல் நலனை கவனிப்பதில் கூட நேரம் இருப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கம், துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களே உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
இதையும் படிக்க : ” கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!




உடல் பருமனை கவனிக்காமல் விட்டால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. தமிழகத்தில் உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் 29.4 சதவிகிதமாகவும், சர்க்கரை நோய் 19.5 சதவிகிதமாகவும் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு மன அழுத்தம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக துரித உணவுகள் போன்ற உணவுகளை அதிக உண்ணும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது. இது உடல் பருமன், சர்க்கரை நோய் என நாளடைவில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலருக்கும் புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் உடல் நிலையை மேலும் மோசமாக்குகின்றன. இந்த நிலையில் நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் உடல் பருமனால் ஏற்படும் மரணங்கள் 80 சதவிகிதத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் பிரச்னையை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இது குறித்து இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஒபிசிட்டி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை, நாட்டில் உடல் பருமன் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் டயாபெட்டீஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் தலைவர் டாக்டர் வி. மோகன், இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றினார். அவர் கூறியதாவது, உணவின் அளவைச் சற்று குறைப்பதன் மூலம் மட்டும் உடல் பருமனை கட்டுப்படுத்திவிட முடியாது. அரசாங்கம் இதனை ஒரு நாள்பட்ட நோயாக அங்கீகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
இது ஒரு மருத்துவ நிலையாகக் கருதப்படும்போது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து, மக்கள் தகுந்த சிகிச்சையை நாட ஊக்குவிக்கப்படுவார்கள். அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கைகளில் உடனடி மாற்றங்களைச் செய்வது பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சுகாதாரச் செலவுகளையும் குறைக்கும் என தெரிவித்துள்ளார்.