AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆபாச படத்தை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்.. சென்னையில் பெண் அளித்த புகாரில் முன்னாள் காதலனுக்கு சிறை!

Chennai Crime : சென்னை மாவட்டத்தில் இளம் பெண்ணை ஆபாச படங்களை காண்பித்த ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த முன்னாள் காதலனை சூளைமேடு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படத்தை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்.. சென்னையில் பெண் அளித்த புகாரில் முன்னாள் காதலனுக்கு சிறை!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Aug 2026 21:08 PM IST

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர் சுகேல் ( 28 வயது). இவர், எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை மாவட்டம், சூளைமேட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மாறி உள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்ததுடன், செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதில், அந்த இளம் பெண் ஏற்கனவே ஒருவருடன் திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றவராவார். இந்த நிலையில், அமீர் சுகேலுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்த நிலையில், அவர் அங்கு சென்று விட்டார். இருந்தாலும், வெளிநாட்டில் பணிபுரிந்தவாறு தனது காதலியுடன் தினமும் செல்போன் வாயிலாக பேசி வந்துள்ளார்.

2- ஆவதாக திருமணம் செய்து கொண்ட காதலி

இதனிடையே, அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது ஊரை சேர்ந்த ஒருவரை 2- ஆவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால், தன்னை மறந்து விடும்படி, அமீர் சுகேலிடம், அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால், அமீர் சுகேல் உன்னை மறக்க முடியாது எனவும், என்னுடன் உள்ள காதலை விடக்கூடாது எனவும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அமீர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அங்கு, அந்த பெண்ணை அவர் சந்தித்து பேசி உள்ளார்.

மேலும் படிக்க: சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. வெல்டிங் மெஷினோடு வந்த மர்ம நபர்கள்.. கும்மிடிப்பூண்டியில் ரூ. 12 லட்சம் கொள்ளை!

ஆசைக்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்த காதலன்

அப்போது, தன்னுடன் ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அமீர் நாம் காதலித்தபோது, ஆபாசமாக எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதன்படி, சில புகைப்படங்களை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு

இதனால், அவர் மீது அதிருப்தி அடைந்த அந்த பெண் சூளைமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் அமீர் சுகேலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!

Follow Us