AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!

Madurai Crime : மதுரை மாவட்டத்தில் மது போதையில் தவறாக நடக்க முயன்ற மகனை பெற்ற தாயை கம்பியால் தாக் கி கொலை செய்து குழியில் புதைத்த சம்பவத்தில் அவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மதுரையில் அதிர்ச்சி.. தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்.. 3 மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை!
கோப்புப்படம் Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Aug 2026 19:44 PM IST

மதுரை மாவட்டம், வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள். இவரது மகன் ராஜா ( 32 வயது). இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த ராஜா அவ்வப்போது மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ராஜாவிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்று விட்டனராம். மேலும், ராஜா முறையாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாராம். அத்துடன், அவர் மீது அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜா அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார்.

தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று புதைத்த தாய்

அப்போது, ஏற்பட்ட போதையின் காரணமாக அவர் தள்ளாடியபடியே வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, இருந்த தனது தாயிடம் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அதற்கு, அவர் பணம் தர மறுத்த நிலையில், பெற்ற தாய் என்றும் பாராமல் அவரிடம் ராஜா தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அய்யம்மாள், தனது மகனை கீழே தள்ளி அருகில் கிடந்த கம்பியால் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க: கோவையில் செல்ல பிராணிகள் விற்பனை கடையில் நாய்-பூனை திருட்டு! உரிமையாளர் உருக்கமான வேண்டுகோள்!

மகனை காணவில்லை என நாடகமாடிய தாய்

உடனே, அவரது சடலத்தை வீட்டில் கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மண்ணால் மூடி புதைத்துள்ளார். அதோடு வீட்டில் இருந்த ரத்த கறைகளையும் அய்யம்மாள் துடைத்து சுத்தப்படுத்தி உள்ளார். இந்த கொலை சம்பவத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அக்கம் பக்கத்தில், தனது மகனை காணவில்லை என்று அய்யம்மாள் நாடகம் ஆடி உள்ளார். சில நாட்கள் கழிந்த நிலையில், அவர் மீது கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன், இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

தாயை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

இந்த நிலையில், திடீரென அய்யம்மாள் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து தனது மகனை கொலை செய்து புதைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அய்யம்மாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. வெல்டிங் மெஷினோடு வந்த மர்ம நபர்கள்.. கும்மிடிப்பூண்டியில் ரூ. 12 லட்சம் கொள்ளை!

Follow Us