சிறை, ஹபீபி படங்களுக்கு விருது வழங்குங்கள் – சட்டமன்றத்தில் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
Thamimun Ansari’s Film Awards Demand : சட்டமன்றத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த வகையில் சிறை என்ற படத்துக்கும், ஹபீபி என்ற படத்துக்கும் விருது வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.
சட்டமன்றத்தில் பேசிய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சிறை மற்றும் ஹபீபி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூக நீதித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசியபோது, தமிழ்நாட்டில் சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது. அந்த வகையில் சிறைை மற்றும் ஹபீபி படங்களுக்கும் தமிழக அரசு சார்பில் விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறை, ஹபீபி படங்களுக்கு விருது வழங்க தமிமுன் அன்சாரி கோரிக்கை
மேலும் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இருந்தால் அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று சொன்னவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அந்த வி.பி.சிங்கை இந்தியாவே மறந்திருக்கிறது. 27 சதவிகித இட ஒதுக்கீட்டை தந்து மண்டல் கமிஷனை அமல்படுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக வி.பி.சிங் மறக்கடிக்கப்படுகிறார் என்றார்.
இதையும் படிக்க : நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரையும் 4 அமைச்சர்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு!




அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சிலையை திறந்து வைத்தார். சிறுமான்மையின மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் படிக்க சென்றால் ரூ.36 லட்சம் மானியம வழங்கப்படுகிறது. அதே போல கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றார். பட்டா இடத்தில் பள்ளிவாசலையும் தேவலாயங்களையும் கட்டுவதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். அவர்கள் சட்டப்பூர்வமாக தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும் கட்டுவதற்கு இடையூறு இல்லாத அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த வகையில் சிறை என்ற படத்துக்கும், ஹபீபி என்ற படத்துக்கும் விருது வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும். வறுமை ஒழிப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த டாடாவும் பிர்லாவும் கொண்டாடினார்கள். அவர் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கமாக இருந்தார். அவர் கீழக்கரையை சேர்ந்த அப்துல் ரஹ்மான். தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வறுமையை போக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். அவரை சிறப்பிக்கும் வகையில் கேளம்பாக்கம் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
சிறை மற்றும் ஹபீபி படங்களும் இஸ்லாமிய சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை காட்சிப்படுத்தியது. சிறுபான்மையினர் துறை சார்பாக நடந்த விவாதங்களில் அந்தப் படத்துக்கு விருது வழங்க எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.