Team India: சஞ்சு இல்லையெனில் உலகக் கோப்பையே இல்லை.. புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav about Sanju Samson: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியைத் தொடர்ந்து வழிநடத்தலாம் என்று சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) நம்பியிருந்தார். இருப்பினும், தேர்வாளர்கள் கேப்டன் பதவியை மாற்றி, அந்தப் பொறுப்பை ஷ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி (Indian Cricket Team) வென்ற பிறகு, பார்ம் அவுட் காரணமாக சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் நீக்கம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியைத் தொடர்ந்து வழிநடத்தலாம் என்று சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) நம்பியிருந்தார். இருப்பினும், தேர்வாளர்கள் கேப்டன் பதவியை மாற்றி, அந்தப் பொறுப்பை ஷ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான ஒரு நேர்காணலில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் குறித்து பேசினார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ: முடிந்த இலங்கை சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது, யாருக்கு எதிராக?
சஞ்சு சாம்சன் குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டி:
2026 உலகக் கோப்பை குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “உலகக் கோப்பை வாய்ப்பு நழுவிவிட்டதாகவே நான் நினைத்தேன். ஆனால். சஞ்சு சாம்சன் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்.” என்றார்.
ஆகாஷ் சோப்ரா: ”சஞ்சு சாம்சன் திடீரென எப்படி மீண்டும் அணிக்குள் வந்தார்? அவர் அப்போது மோசமான ஃபார்மில் இருந்தாரே?” என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “ நியூசிலாந்து தொடரின்போது சஞ்சு சாம்சனின் ஆட்டம் சிறப்பாக இல்லை (ஃபார்மில் இல்லை). அதனால், உலகக் கோப்பையின் ஆரம்பகட்டப் போட்டிகளில் அவரை விலக்க வேண்டும் (அவரை அணியில் சேர்க்க வேண்டாம்) என்று நாங்கள் முடிவு செய்தோம். நான் அவரிடம், “சஞ்சு, உன்னை அணியில் சேர்ப்பது கடினமாக இருக்கும்” என்று கூறினேன். அதற்கு அவர், “அணிக்கு எது சிறந்ததோ அதைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது நான் எப்போதும் தயாராக இருப்பேன். நான் விளையாடப் போவது போலவே அணியின் வெளியிலிருந்தும் என்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்.
ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை.. இந்திய அணி எப்போது களமிறங்கும்?
நாங்கள் அவரை அணியில் சேர்க்காமல் வைத்திருந்தோம். ஆனால், எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்களும் இடது கை ஆட்டக்காரர்களாக மாறிய சூழலில், நாங்கள் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தோம். அப்போது எனக்கு சஞ்சு சாம்சனின் நினைவு வந்தது. அவர் உள்ளே வந்து, மிக முக்கியமான 3 இன்னிங்ஸ்களை ஆடி, நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல உதவினார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.” என்றார்.


