AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SA vs NAM: கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக்.. டி20யில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா வெற்றி!

Namibia beats South Africa: விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது, ஆனால் அது ஒரு முழுமையான தவறாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் ஃப்ரைலிங்க், 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

SA vs NAM: கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக்.. டி20யில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா வெற்றி!
தென்னாப்பிரிக்கா Vs நமீபியாImage Source: ICC/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2026 22:26 PM IST

முத்தரப்புத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை (South Africa) 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா வரலாறு படைத்தது. இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நமீபியாவின் இரண்டாவது டி20 சர்வதேச வெற்றியாகும். கடந்த 2025ம் ஆண்டும் இதே போன்ற ஒரு சாதனையை நமீபியா அணி நிகழ்த்தியிருந்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா (Namibia), 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தது.

ALSO READ: சமனில் முடிந்த 2வது டெஸ்ட்.. 5வது இடத்தில் முடங்கிய இந்தியா.. WTC 27 பைனலுக்கு செல்லுமா?

விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது, ஆனால் அது ஒரு முழுமையான தவறாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் ஃப்ரைலிங்க், 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். சக தொடக்க ஆட்டக்காரரான லாரன் ஸ்டீன்காம்ப், 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 58 பந்துகளில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதன்மூலம், நமீபியா அணி ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றது. இதற்குப் பிறகு, சில விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்ததால், மொத்த ஸ்கோர் 163 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, நமீபியா அணி 190 ரன்களை எளிதில் எட்டிவிடுவார்கள் என்று தோன்றியது. இந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்காக பிரேனலன் சுப்ரயன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை எடுத்தவராகத் திகழ்ந்தார்.

சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி:


சேஸிங்கில் தென்னாப்பிரிக்கா முற்றிலும் தடுமாறியது. 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து, அந்த அணி ஒரு மோசமான தொடக்கத்தைப் பெற்றது. ஜோர்டான் ஹெர்மன் 7 ரன்களுக்கும், லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதிலிருந்து தென்னாப்பிரிக்கா அணியால் மீளவே முடியவில்லை. டிவால்ட் பிரெவிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்கள் என்ற சிறப்பான இன்னிங்ஸை விளையாடிய போதிலும், அவரது ஆட்டம் வெற்றி வித்தியாசத்தைக் குறைக்க மட்டுமே உதவியது.

ALSO READ: வெயிலில் வெகுநேரம் நின்ற தேவ்தத் படிக்கல்.. இலவசமாக பச்சை குத்திய சூரிய பகவான்!

பிரெவிஸைத் தவிர, டுவேன் ஜான்சன் 25 ரன்கள் எடுத்தார். மொத்தம் 7 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை எட்டத் தவறினர். இதில், 3 தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நமீபியா சார்பில், ரூபன் ட்ரம்பல்மேன் மற்றும் ஜே.ஜே. ஸ்மித் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜாக் பிரேசல் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Follow Us