AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சாந்தினி!

Chandini Tamilarasan Eviction: தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6வது வாரத்தில் உள்ள நிலையில், இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், 2வது போட்டியாளாராக சாந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சாந்தினி!
சந்தினி தமிழரசன் வெளியேற்றம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2026 19:17 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 6 வாரத்தை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது மொத்தம் 16 போட்டியாளர்களே உள்ளனர். இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற நிலையில், இந்த வாரத்தில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் ராகவ் ரங்கநாதன் (Raaghav Ranganathan) வெளியேற்றப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து நடிகை சாந்தினி (Chandini Tamilarasan) வெளியேற்றப்பட்டுள்ளார் என இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது.

அந்த விதத்தில் தற்போது இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வாரத்தில் 2வது போட்டியாளராக சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் அவசியம்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய ராகவ் – கண்ணீர் வெள்ளத்தில் போட்டியாளர்கள்!

பிக் பாஸில் 6வது வாரத்தில் வெளியேற்றப்பட்ட சாந்தினி:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவந்தவர் சாந்தினி. இவர் கடந்த 2026ம் ஆண்டில் செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்தது. இந்த போட்டியில் போட்டியாளராக சாந்தினி தமிழரசன் நுழைந்த நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சாந்தினி, பிக் பாஸில் பல டாஸ்குகளை சிறப்பாக செய்துவந்தார்.

இதையும் படிங்க: எனது இறுதி மூச்சுள்ள வரைக்கும்.. இணையத்தில் வைரலாகும் ஜோதிகா – சூர்யாவின் திருமண வீடியோ!

அந்த விதத்தில் கடந்த சில வாரங்களாக அவர் டாஸ்கில் சரியாக பங்குபெறவில்லை. அந்த விதத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் அவருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. அந்த விதத்தில் மக்களின் ஒட்டு காரணமாக அவர் இந்த வராத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 42வது 4வது ப்ரோமோ பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கும் நிலையில், ராகவ் ரங்கநாதன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது சாந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் 7வது வாரத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளனர். மேலும் 7வது வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us