Deva: முடிவுக்கு வந்தது தேனிசைத் தென்றல் தேவாவின் சகாப்தம்.. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!!
Thenisai Thendral Deva Funeral: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பழம்பெரும் இசையமைப்பாளராக இருந்துவந்தவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் நேற்று (17/10/2026) மாரடைப்பின் காரணமாக காலமான நிலையில், இன்று (18/10/2026) அவரின் உடல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சக்கரமல்லூர் என்ற பகுதியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தில் மிகவும் பேமஸான இசையமைப்பாளராகவும், கானா பாடகராகவும் பேமசானவர் தேனிசைத் தென்றல் தேவா (Music Director Deva). இவர் கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இவரின் இசையமைப்பில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் முதல்வர் விஜய் நடித்திருந்த சூப்பர் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். 76 வயதான தேவா, நேற்று (17/10/2026) காலையில் மாரடைப்பின் (Heart attack) காரணமாக காலமானார். தேவாவுக்கு தனது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார்.
அந்த விதத்தில் நேற்று சென்னையில் அவரின் இல்லத்தில் மக்கள் மற்றும் பிரபலங்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று (18/10/2026) அவரின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதில் உள்ள சக்கரமல்லூர் என்ற பகுதிக்கு அவரின் உடல் கொண்டுவரப்பட்டது. பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எளிய மக்களின் வாழ்வியலை சொன்னவர்… – இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு துணைக் குடியரசுத் தலைவர் இரங்கல்




அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட தேனிசைத் தென்றல் தேவாவின் உடல்:
தமிழக முதல்வர் விஜய், நேற்று (17/10/2026) மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இன்று அவரின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சக்கரமல்லூர் என்றார் பகுதியில், தேவாவின் தோட்டத்தில் அவரின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!
மேலும் அவரின் உடல் அடக்கம் வரை இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் ஜெய் போன்ற பிரபலங்கள் இருந்து நடத்தி கொடுத்திருந்தனர். இந்நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். சினிமாவில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ள நிலையில், இவ்வளவு பெரிய பிரம்மாண்ட இசையமைப்பாளரின் சகாப்தம் நிறைவடைந்துள்ளது. இது பெரும் சோகத்தை தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.