ஆப்ரேஷன் அவசியம்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய ராகவ் – கண்ணீர் வெள்ளத்தில் போட்டியாளர்கள்!
Raaghav Evicted Due to Health: சின்னத்திரையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ராகவ் வெளியேற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியைகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). விஜய் டிவியில் (Vijay Tv) ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துவரும். அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்த்தியானது தொடங்கிய நிலையில், 6வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்திற்கான டாஸ்க் எல்லாமே சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதிலும் இந்த வாரத்தில் டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஎப் வாசன் சிறப்பாக விளையாடிய நிலையில், அவருக்கு இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது. அந்த விதத்தில் சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. மேலும் பிக் பாஸில் ராகவ்-வுக்கு (Raaghav Ranganathan) சில நாட்களாக காலில் பிரச்சனை இருந்த நிலையில், பெரிதாக எந்த டாஸ்க்கிலும் அவர் பங்குபெறவில்லை.
அந்த விதத்தில் பிக் பாஸில் மருத்துவர்கள் சோதித்த நிலையில், அவருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்யவேண்டும் என கூறப்பட்டது. மேலும் இணையத்தில் ராகவ் வெளியேற்றப்பட்டுவிட்டார் என தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், தற்போது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ராமாயணா படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் செய்த சிறப்பான விஷயம்.. அட என்ன தெரியுமா?
உடல்நல குறைவின் காரணமாக பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ராகவ்:
பிக் பாஸில் ஆரம்ப வாரங்களில் ராகவ் பல்வேறு டாஸ்குகளில் சிறப்பாக செயல்பட்டுவந்தார். அந்த விதத்தில் அவருக்கு இந்த நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. மேலும் சமீபத்தில் டாஸ்கின்போது வருக்கு காலில் அடிபட்ட நிலையில், அவரால் கடந்த வாரத்தில் எந்த டாஸ்க்கிலும் பங்குபெற முடியவில்லை.
இதையும் படிங்க: நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான் – வெளியானது அப்டேட்
அந்த விதத்தில் இவரின் காலில் பிரச்சனை இருக்கும் நிலையில், அதை ஆப்ரேஷன் செய்தால்தான் குணமாகும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், தவிர்க்கமுடியாததன் காரணமாக ராகவ் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதில் விஜய் சேதுபதி ராகுவ் -வை அழைத்து பேசுவதுபோல அதில் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 42வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day42 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/1lfPgqyC8v
— Vijay Television (@vijaytelevision) October 18, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற நிலையில், 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படவேண்டும். அதில் ராகவ் உடல்நிலை சரியில்லாததால் வெளியேற்றப்பட்டுளார். அதன் பிறகு மக்களின் ஒட்டு எண்ணிக்கையின்படி மற்றொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட்டுளாம். அவர் வேறுயாருமில்லை நடிகை சாந்தினிதான். இவர் 6 வாரம் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து நிலையில், தற்போது வெளியேற்றப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.