AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: சவால் நிறைந்த நியூசிலாந்து சூழல்.. சூர்யவன்ஷிக்கு டஃபி எச்சரிக்கை!

India vs New Zealand T20 Series: இந்திய அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, வைபவிற்கு எதிராக சிறப்பு உத்தி வகுத்துள்ளதாக எச்சரித்துள்ளார்.

IND vs NZ: சவால் நிறைந்த நியூசிலாந்து சூழல்.. சூர்யவன்ஷிக்கு டஃபி எச்சரிக்கை!
வைபவ் சூர்யவன்ஷி - டஃபி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2026 08:00 AM IST

இந்திய அணி நியூசிலாந்தை (IND vs NZ) வந்தடைந்துள்ளது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 விரைவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரின் பார்வையும் இருக்கும். இருப்பினும், போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, இந்திய அணியின் (Indian Cricket Team) இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி எச்சரித்துள்ளார். வைபவிற்கு எதிராக நியூசிலாந்து அணி ஒரு சிறப்பு உத்தியைத் தயாரித்துள்ளதாகவும், இங்குள்ள சூழல் அவரைச் சோதிக்கும் என்றும் டஃபி கூறினார்.

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் அனைவரின் பார்வையும் வைபவ் சூர்யவன்ஷி மீது இருக்கும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, வைபவின் திறமையைப் பாராட்டியதோடு, இந்த இளம் பேட்ஸ்மேனுக்கு எதிராக நியூசிலாந்து அணி ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ: 4 நாட்களில் அடுத்த டி20 தொடர்.. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா!

ஜேக்கப் டஃபி கூறியது என்ன..?

வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, “முதலாவதாக, வைபவ் சூர்யவன்ஷி ஒரு அற்புதமான திறமையாளர். வெளிப்படையாக, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார், மேலும் பந்தை மிகவும் வேகமாக அடிக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி 250 ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிக்கிறார். சூர்யவன்ஷி இங்கிலாந்தில் விளையாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் இங்குள்ள சூழ்நிலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது அவருக்குச் சவாலாக அமையக்கூடிய ஒரு விஷயம். நாங்கள் நிச்சயமாக அவருக்கு எதிராகத் தயாராகி, ஒரு பயிற்சி அமர்வில் அவரை ஆய்வு செய்து, அவருக்கு எதிராக எப்படிப் பந்துவீச வேண்டும் என்பதை திட்டமிடுவோம்” என்று கூறினார்.

வாய்ப்பு கிடைப்பது கடினம்

இருப்பினும், அணி நிர்வாகத்தின் சமீபத்திய முடிவுகளையும் அறிக்கைகளையும் கருத்தில் கொள்ளும்போது, ​​வைபவிற்கு வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே தெரிகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஜோடியையே தொடர்ந்து பயன்படுத்தவே அணி விரும்புவதால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே இது நிகழ வாய்ப்புள்ளது.

ALSO READ: இந்திய அணியின் டி20 போட்டி நேரம் மாற்றம்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

ஜேக்கப் டஃபியைத் தவிர, நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி மற்றும் கைல் ஜேமிசன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இதனால், இந்திய பேட்டிங்கிற்கு எதிராக இந்த வேகப்பந்து தாக்குதல் ஒரு பெரிய சவாலாக இருக்கும். நியூசிலாந்தின் மாறுபட்ட சூழ்நிலைகளில் வைபவ் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் தாக்கத்தை ஏற்படுத்துவாரா அல்லது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் தந்திரங்கள் அவருக்குச் சிக்கல்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us