உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி – அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather today : வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 21, 2026 இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக அக்டோபர் 26, 2026 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 21 : தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 21, 2026 இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (Low Pressure Area) உருவாகி, சரியாக 8. 30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வருகிற அக்டோபர் 26, 2026 வரை தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 21, 2026 இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!




அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22, 2026 நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 23, 2026 அன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 24, 2026 இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் 25, 2026 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : முதல் சுற்று மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. தேதி வாரியாக சொன்ன டெல்டா வெதர்மேன்!
அக்டோபர் 26, 2026 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.