AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் பள்ளிகளில் தேங்கிய மழைநீர்.. மழை தொடர்ந்தால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

Chennai Rain School Leave Update: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) அறிக்கை தயாரித்து வருகிறார். மழையின் தீவிரத்தைப் பொறுத்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இறுதி முடிவு எடுப்பார் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பள்ளிகளில் தேங்கிய மழைநீர்.. மழை தொடர்ந்தால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Oct 2026 12:34 PM IST

சென்னை, அக்.21: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடிய விடிய பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ள விவகாரம் மற்றும் தற்போதைய கள நிலவரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாலை மற்றும் இரவில் நிலவும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: முதல் சுற்று மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. தேதி வாரியாக சொன்ன டெல்டா வெதர்மேன்!

பள்ளிகளில் தேங்கிய மழைநீர்:

சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 650-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், இதில் பல பள்ளிகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளதால் இரவு பெய்த கனமழையின் காரணமாக வளாகங்களுக்குள் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, ஒக்கியம் துரைப்பாக்கம், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கியதாகத் தகவல்கள் வெளியாயின. இருப்பினும், மாநகராட்சி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகளால் பெரும்பாலான பள்ளிகளில் தேங்கியிருந்த மழைநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது என்றும், தற்போது அங்கு பெரிய அளவில் தேக்கம் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நீட்டிப்பு குறித்த இறுதி முடிவு:

மாணவர்கள் எங்குமின்றிப் பாதுகாப்பாகப் பள்ளிகளுக்கு வந்து செல்லக்கூடிய சூழல் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்த முழுமையான அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையின் விவரங்கள் மற்றும் மாலை நேரங்களில் பெய்யக் கூடிய மழையின் தீவிரத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்குச் சிஇஓ தரப்பிலிருந்து பரிந்துரைகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் அளிக்கும் களப் பரிந்துரைகளின் அடிப்படையில் தான், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி விடுமுறை தொடர்பான இறுதி முடிவை எடுத்து அறிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு; அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவு!!

நாளை விடுமுறை கிடைக்குமா?

இன்று மாலை நிலவரப்படி மீண்டும் மழை தீவிரமடையும் பட்சத்தில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்திற்கும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கான அதிகாரப்பூர்வ பரிந்துரை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஆயத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருவேளை மழை தொடர்ந்து பெய்து நீர் தேங்கும் நிலை நீடித்தால், நாளையும் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதால் மாணவ-மாணவியரும் பெற்றோரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வானிலை மற்றும் கல்வித்துறை அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Follow Us