AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல் சுற்று மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. தேதி வாரியாக சொன்ன டெல்டா வெதர்மேன்!

Tamil Nadu Weather Rain updates : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடாவை நோக்கி நகர்வதால், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21 முதல் 24 வரை தீவிரமடையவுள்ளது. வட கடலோர, காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல் சுற்று மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. தேதி வாரியாக சொன்ன டெல்டா வெதர்மேன்!
சென்னை மழைImage Source: PTI
C Murugadoss
C Murugadoss | Published: 21 Oct 2026 11:16 AM IST

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையின்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று (Tamil Nadu Weather Rain update)  தீவிரமடையவுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையான கீழைக்காற்று தமிழகம் நோக்கி திரும்பும். அக்டோபர் 21 முதல் 24 வரை வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தீவிரமடையும். சூப்பர் எல் நினோ முதல் கட்ட தாக்கம் விலகி, அக்டோபர் 15 அன்று வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவில் துவங்கியது. எனினும், இதுவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி பரவலாகும்.

அக்டோபர் 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்களில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை தீவிரமடையும். கடலோர மாவட்டங்களில் நாளை முதல் அதிகாலை மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பதிவாகும். உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பதிவு

மாவட்ட வாரியான கனமழை எச்சரிக்கை

அக்டோபர் 21: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை எதிர்பார்க்கலாம். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற மத்திய உள் மாவட்டங்களிலும் மழை வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடங்கி, இரவு முதல் பரவலாகும்.

Also Read: அடுத்த 2 நாட்களுக்கு இங்கு தான் மழையின் ‘ஹாட் ஸ்பாட்’.. கனமழைக்கு அதிக வாய்ப்பு

அக்டோபர் 21, 22: வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் மிக கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளது.
அக்டோபர் 22, 23: தென் மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்கள்

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இடையூறு இருக்கும் என்பதால், விவசாயிகள் உரமிடுதல், பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு போன்ற பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக காவிரி டெல்டா, வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் வேளாண் பணிகளை ஒத்தி வைப்பது நல்லது. புதிதாக நாற்று நடுதல் அல்லது விதை தெளித்தல் போன்ற பணிகளை கனமழைக்கு ஏற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறுவடை விவசாயிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு அறுவடைப் பணிகளை ஒத்தி வைப்பது சிறந்தது.

மீனவர்களைப் பொறுத்தமட்டில், கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீ வரையிலும், அவ்வப்போது 50 கி.மீ வேகத்திலும் வீச வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்

Follow Us