AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்த 2 நாட்களுக்கு இங்கு தான் மழையின் ‘ஹாட் ஸ்பாட்’.. கனமழைக்கு அதிக வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜானின் லேட்டஸ்ட் கணிப்பு!

Pradeep John Weather Forecast: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குத் தென் மாவட்டங்களே மழையின் 'ஹாட் ஸ்பாட்டாக' இருக்கும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு இங்கு தான் மழையின் ‘ஹாட் ஸ்பாட்’.. கனமழைக்கு அதிக வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜானின் லேட்டஸ்ட் கணிப்பு!
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Oct 2026 09:58 AM IST

சென்னை, அக்.21: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சூழலில், வானிலை மாற்றங்கள் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் மழை எங்கு தீவிரமடையும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் மற்றும் எல்நினோ தாக்க ஆய்வு குழு உறுப்பினர் பிரதீப் ஜான் பல முக்கியத் தகவல்களையும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சென்னை மற்றும் வடமாவட்டங்களில் பகல் நேரங்களில் மழை சற்றுக் குறைந்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமான முதல் கனமழை தொடரும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தின் தென் மாவட்டங்களே மழையின் முக்கிய மையப் பகுதியாக (Hotspot) இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு; அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவு!!

சென்னையின் தற்போதைய வானிலை நிலவரம்:

சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமாகக் கொட்டித் தீர்த்த கனமழை மேகங்கள் தற்போது தென் ஆந்திரா மற்றும் மேல்நோக்கி நகர்ந்துள்ளதாகப் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இதனால் பகல் நேரங்களில் மழை படிப்படியாகக் குறைந்து காணப்படும் என்றாலும், புறநகர் மற்றும் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் அல்லது திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், நேற்றைய அளவுக்குப் பெருமழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், இன்று இரவிலிருந்து நாளை காலை வரை மீண்டும் மிதமான அளவில் 4 முதல் 5 சென்டிமீட்டர் வரை மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாவட்டங்களில் தீவிரமடையும் கனமழை:

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் காற்றுச் சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா வழியாக அரபிக் கடலை நோக்கிச் செல்வதால், ஈரப்பதமிக்க காற்று தென் தமிழகத்தின் மீது தீவிரமாகக் குவிகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் உள் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குதி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் முக்கிய ‘ஹாட் ஸ்பாட்டாக’ச் செயல்படும் என்று பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இத்தகைய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!

அடுத்தடுத்த புயல் சின்னங்கள் குறித்த கணிப்பு:

வங்கக்கடலின் தென்கிழக்கில், அந்தமான் பகுதி அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி வருவதாகவும், அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்குச் சில வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய புயல் சின்னம் வட ஆந்திரா அல்லது மத்திய ஆந்திராப் பகுதியை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்குக் கூடுதல் மழை கிடைக்க வழிவகுக்கும் என்றும், ஒருவேளை ஒடிசா பக்கம் திரும்பிச் சென்றால் மழையில் சிறிது இடைவெளி (Break) கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கணக்கிட்டுக் கூறியுள்ளார். எது எப்படியிருப்பினும், அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us