திருமணமான 8 மாதத்தில் சோகம்.. கணவர் வெளியே அழைத்த செல்லாததால் பெண் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் நிகழ்ந்த சம்பவம்!
Chennai Crime : சென்னை மாவட்டத்தில் விஜய தசமி தொடர் விடுமுறையில் தன்னை வெளியே அழைத்து செல்ல கணவர் மறுத்த காரணத்தால் மனம் உடைந்த மனைவி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 8 மாதத்தில் சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மாவட்டம், குரோம்பேட்டை அருகே உள்ள நெமிலிச்சேரி பாத்திமா நகரில் வசித்து வருபவர் ஜெகதீசன் ( 28 வயது). இவர், பல்லாவரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அருணா ( 26 வயது) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு தனது கணவர் ஜெகதீசனிடம் மனைவி அருணா கூறியுள்ளார். ஆனால், ஜெகதீசன் தனது நண்பர்களுடன் வெளியே செல்ல இருப்பதால் தற்போது அனைத்து செல்ல முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
விடுமுறைக்கு வெளியே அழைத்து செல்ல மறுப்பு- மனைவி விபரீத முடிவு
இதனால், மனம் உடைந்த மனைவி அருணா தனது கணவரும் ஜெகதீசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறாக மாறி உள்ளது. பின்னர், ஜெகதீசன் நான் கூறியது போல நண்பர்களுடன் வெளியே சென்று விட்டார். பின்னர் வெகு நேரத்துக்கு பிறகு நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு ஜெகதீசன் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அவரது மனைவி அருணா படுக்கை அறையில் மின்விசையில் சேலையால் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!




சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் இருந்து அருணாவை மீட்டு உயிர் இருக்கும் என்ற சந்தேகத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீசார் அருணாவின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கணவர் ஜெகதீசன் அளித்த புகாரின் அடிப்படையில், சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதிக்கு திருமணம் நடைபெற்று 8 மாதங்களே ஆகும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ஆர். டி. ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க . . .
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050.
மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!