AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!

Virudhachalam Private Bus Accident : கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதிய விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!
விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Oct 2026 11:51 AM IST

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட 15- க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது, அந்த பகுதியில் உள்ள வேப்பிலங்குறிச் சி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடியது. இதில், அந்த பேருந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தனியார் பேருந்தில் காயமடைந்த நிலையில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த பயணிகள் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!

பாட்டு கேட்டபடி பேருந்து ஓட்டியதால் நேர்ந்த விபத்து

தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இதில், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பேருந்தில் பயணித்து படுகாயம் அடைந்த பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இதில், பேருந்தின் ஓட்டுநர் பாட்டு கேட்டபடி அலட்சியமாக பேருந்தை இயக்கியதால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில், தனியார் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது

அங்கு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் சாலையின் குறுக்கே தனியார் பேருந்து விபத்தில் சிக்கிக் கிடந்ததால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அந்த பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!

Follow Us