AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனியார் வசம் செல்லும் சென்னை- கொல்கத்தா விமான நிலையம்? மத்திய அரசின் புது யோசனை!

Chennai ஓnd Kolkata Airports To Private Entities : சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இரு விமான நிலையங்களும் உலகத்தரத்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் வசம் செல்லும் சென்னை- கொல்கத்தா விமான நிலையம்?  மத்திய அரசின் புது யோசனை!
கோப்புப்படம்.Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 Oct 2026 11:06 AM IST

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் (Chennai Airport) சேவை தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தவும், விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த இரு விமான நிலையங்களையும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவர மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய முன்னணி நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களையும் தனியார் பட்டியலில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை

இதற்காக முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவை தரம், விமான போக்குவரத்து மற்றும் சரக்குகள் கையாளும் திறன் மற்றும் பயணிகள் வசதி ஆகியவற்றை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்,

மேலும் படிக்க: சிறையில் அடைக்கப்பட்டும் திருந்தவில்லை.. பாளையங்கோட்டை சிறை அதிகாரி-வார்டன் மீது தாக்குதல்.. நெல்லையில் பெரும் பரபரப்பு!

  • சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மயமாக்க வேண்டும்.
  • தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விமான நிலையத்தின் சேவைகளை உயர்த்த வேண்டும் என்ற இரு கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் விமான நிலையம்

பொதுவாக விமான நிலையங்களில் அன்றாட நிர்வாகம், உணவகங்கள் மற்றும் உள்கட்ட அமைப்பு மேம்பாடுகள் மற்றும் கடைகள் ஆகியவை மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும். அதே வேளையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய சேவையான விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்து வரும் என்று டெல்லி சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

உலகத்தரத்துக்கு புதுப்பொலிவு பெறும் விமான நிலையம்

தற்போது, சென்னை விமான நிலையம் மற்றும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்படும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் சர்வதேச அளவுக்கு புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்கால பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அடுத்தடுத்து சம்பவம்.. விருதுநகரில் சிக்கிய போதை மாத்திரைகள்? தென்காசியை சேர்ந்தவர் அதிரடி கைது!

Follow Us