AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC U19 Women’s T20 World Cup 2027: 2027 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்திய அணி எந்த குழுவில் இடம்?

ICC U19 Women's T20 World Cup 2027 Schedule: ICC U19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2027 அட்டவணை அறிவிப்பு. இந்திய அணி அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளத்துடன் 'ஏ' பிரிவில் உள்ளது. ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறும் போட்டிகள், இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச அனுபவம் வழங்குகின்றன. இந்தியாவின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக. சூப்பர் சிக்ஸ், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி குறித்த முழு விவரங்கள் இங்கே.

ICC U19 Women’s T20 World Cup 2027: 2027 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்திய அணி எந்த குழுவில் இடம்?
இந்திய மகளிர் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2026 18:29 PM IST

இந்திய அணி (Indian Cricket Team), அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘ஏ’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து (Newzealand) மற்றும் சமோவா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘பி’ பிரிவில் உள்ளது. ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 2027 ஜனவரி 21ம் தேதி தொடக்க நாளில் 8 அணிகள் (நான்கு போட்டிகள்) விளையாடும்.

ALSO READ: இந்திய அணியின் டி20 போட்டி நேரம் மாற்றம்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா, ”ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இளம் வீராங்கனைகளுக்கு அவர்களின் வயதுப் பிரிவில் மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதற்கும், உலக அரங்கில் அனுபவம் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. வங்கதேசம் மற்றும் நேபாளத்திலிருந்து 16 அணிகளை ஒன்றிணைக்கும் இந்தத் தொடர், மகளிர் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் திறமையாளர்களின் தொகுப்பை வெளிக்காட்டும். மேலும், கிரிக்கெட்டில் நன்கு நிலைபெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் முன்னேறுவதற்கான வாய்ப்பையும் இது வழங்கும்.” என்று கூறினார்.

இந்தத் தொடர் வருகின்ற 2027 ஜனவரி 21ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 4 போட்டிகள் நடைபெறும். காலையில் வங்கதேசம் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. பின்னர், முந்தைய தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா, மதியம் நைஜீரியாவுடன் மோதுகிறது. காத்மாண்டுவில் உள்ள அப்பர் முல்பானி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை, ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, அமெரிக்காவுடன் மோதுகிறது. 2 முறை நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியை 2027 ஜனவரி 22ம் தேதி காத்மாண்டுவில் உள்ள TU சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது.

போட்டியை நடத்தும் நேபாளம் அதே நாளில் அயர்லாந்துக்கு எதிராக தனது பயணத்தைத் தொடங்கும். நியூசிலாந்து சிட்டகாங்கில் சமோவாவுடனும், தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானுடனும் மோதுகின்றன. லீக் ஸ்டேஜ் போட்டிகள் 2027 ஜனவரி 26ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு தகுதி பெற்ற அணிகள் சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்குள் நுழையும். இங்கு, 6 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ALSO READ: ஹாட் ஸ்டார் இல்லை.. இந்தியா – நியூசிலாந்து முதல் டி20யை எங்கு காணலாம்?

அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகள் எப்போது..?

அரையிறுதிப் போட்டிகள் 2027 பிப்ரவரி 4 அன்று பிர் ஸ்ரேஸ்தா ஷஹீத் ஃப்ளைட் லெப்டினன்ட் மதியூர் ரஹ்மான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 2027 பிப்ரவரி 5ம் தேதி ரிசர்வ் நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி 2027 பிப்ரவரி 6ம் தேதி உள்ளூர் நேரப்படி (IST) மதியம் 1:30 மணிக்கு நடைபெறும். இப்போட்டி இந்திய திட்ட நேரப்படி (IST) மதியம் 1:00 மணிக்குத் தொடங்கும். இதற்கு 2027 பிப்ரவரி 7ம் தேதி ரிசர்வ் நாளாகும்.

Follow Us