AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புழல் சிறையில் அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம் – பெரும் பரபரப்பு

Chennai Puzhal Prison Escape : சென்னை புழல் சிறையில் இருந்து இரு நாள்களில் 2 கைதிகள் அடுத்தடுத்துத் தப்பியோடிய சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதி ஒருவர் அக்டோபர் 20, 2026 நேற்று மாயமான நிலையில், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மற்றொருவரும் தப்பிச் சென்றுள்ளார்.

புழல் சிறையில் அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம் – பெரும் பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Oct 2026 18:35 PM IST

சென்னை, அக்டோபர் 21 : சென்னை புழல் சிறையில் இருந்து இரு நாள்களில் 2 கைதிகள் அடுத்தடுத்துத் தப்பியோடிய சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதி ஒருவர் அக்டோபர் 20, 2026 நேற்று மாயமான நிலையில், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அக்டோபர் 21, இன்று தப்பிச் சென்றுள்ளார். இருவரையும் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

புழல் சிறையில் 3,300க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் அறைகளிலிருந்து வெளியே அனுமதிக்கப்பட்டு, மாலை சுமார் 6 மணிக்கு மீண்டும் அறைகளுக்குள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை கைதிகள் அறைகளுக்குத் திரும்பியபோது, அவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது.

இதையும் படிக்க : கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!

அப்போது நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகதி என்ற விசாரணைக் கைதி அறைக்குத் திரும்பாதது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த சிறைக் காவலர்கள், அனைத்துக் கைதிகளையும் மீண்டும் ஒருமுறை எண்ணிச் சரிபார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறை முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரம்

உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறை வளாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் இந்தத் தேடுதலிலும் பலன் கிடைக்கவில்லை. குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பலத்த பாதுகாப்பு கொண்ட சிறையிலிருந்து எப்படி வெளியேறினார் என்பது இதுவரை தெரியவில்லை.

அடுத்த நாளே தப்பியோடிய மற்றொரு கைதி

நேபாள கைதி மாயமானது குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று மற்றொரு கைதியும் தப்பியோடியுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ், பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுப் புழல் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் அக்டோபர் 21, 2026 இன்று அவர் பெட்ரோல் பங்க் பணிக்காகச் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : முதல் சுற்று மழை.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. தேதி வாரியாக சொன்ன டெல்டா வெதர்மேன்!

அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்காக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறையிலிருந்து கைதிகள் வெளியேறியது எப்படி என்பது தெளிவாகத் தெரியாததால், சிறைத்துறை ஊழியர்கள் கடும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் புழல் சிறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 கைதிகளையும் உடனடியாக கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிறைக்குள் இருந்த நேபாள நாட்டு கைதி தப்பியது எப்படி என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Follow Us