வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் நிலச்சரிவு.. ஆழியார் சுங்கச்சாவடியில் சிக்கிய மக்கள்.. உணவு- குடிநீர் இன்றி கடும் அவதி!
Valparai- Pollachi Road Landslide : கோவை மாவட்டத்தில் வால்பாறை டூ பொள்ளாச்சி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா சென்ற ஏராளமான பொது மக்கள் ஆழியார் சுங்கச்சாவடியில் சிக்கினர். அவர்களுக்கு உணவு, குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் நேற்று இரவு திடீர் நிலச்சரிவு மற்றும் ராட்சச பாறைகள் சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பொதுமக்கள் அங்கு சிக்கி உள்ளனர். மேலும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் சமவெளி பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக சென்றிருந்தனர். அவர்கள் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்ற நிலையில் மலைப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து தடை காரணமாக ஆழியாறு சுங்க சாவடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் காத்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் நிலச்சரிவு
இந்த நிலையில், திடீரென வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் 2- ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ராட்சச பாறைக்கற்கள் சரிந்து சாலைகளில் ஆங்காங்கே விழுந்தன. இதனால் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாகவும் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் ஆழியார் சுங்க சாவடி அருகில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு சிக்கி உள்ளதால் அவர்களுக்கு குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தனியார் வசம் செல்லும் சென்னை- கொல்கத்தா விமான நிலையம்? மத்திய அரசின் புது யோசனை!
உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி…
இதனால், ஆழியார் சுங்கச் சாவடியில் சிக்கி உள்ள பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த தடங்கல் காரணமாக எந்த விதமான முன் அறிவிப்போ அல்லது மாற்று ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரவு முழுவதும், பொதுமக்கள் குழந்தைகளுடன் சாலையிலேயே காத்து இருக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் கிடைக்காமல் கடும் பசி மற்றும் தாகத்துக்கு ஆளாகினர்.
கடும் அவதி அடைந்து வரும் பொது மக்கள்
குறிப்பாக குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். இயற்கை இடர்பாடு காரணமாக போக்குவரத்து தடைபட்டு உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தற்காலிக நிவாரண பணிகளோ அல்லது முறையான தகவல்களோ வழங்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!