AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீர வணக்க நாள்.. பணியில் மரணம் அடைந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ.5.96 கோடி.. முதல்வர் விஜய் வழங்கினார்!

CM Vijay Presented Insurance For Police Families : தமிழக காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 கோடியே 96 லட்சம் காப்பீட்டு தொகையை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். முன்னதாக உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

வீர வணக்க நாள்.. பணியில் மரணம் அடைந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ.5.96 கோடி.. முதல்வர் விஜய் வழங்கினார்!
காவலர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்கிய முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Oct 2026 14:08 PM IST

நாட்டில் கடந்த 1959- ஆம் ஆண்டு அக்டோபர் 21- ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர் மறைந்திருந்து திடீரென நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21- ஆம் தேதி காவலர் வீர வணக்கம் நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டு தொகை ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் உயிர்நீத்த 7 காவலர்கள்

அதன்படி, சென்னை காவல் துறை தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது, உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையில் உள்ள ஒரு காவலர் என 7 காவலர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: தனியார் வசம் செல்லும் சென்னை- கொல்கத்தா விமான நிலையம்? மத்திய அரசின் புது யோசனை… என்ன அது!

7 காவலர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டு தொகை

இதனை தமிழக அரசின் சம்பள தொகுப்பு திட்டத்தின் கீழ், தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ. 5 கோடியே 96 லட்சத்துக்கான ஆணையை முதல்வர் ஜோசப் விஜய் சம்பந்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கினார். இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்- ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்டும் உயரிய கடமைகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

காவலர்களின் உன்னத பணிகளை போற்றுவோம்

இயற்கை பேரிடர்கள், குற்ற சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள், விபத்துக்கள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணிபுரியும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீர்த்து, அமரர்களான வீர தியாகிகளுக்கு தலை வணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காவல்துறையினரின் அயராது உழைப்பு உள்ளிட்ட உன்னத பணிகளை போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மகளிர் குழு கடனால் வந்த வினை? மாமனார்- மாமியார் திட்டியதால் விபரீதம்.. ராமநாதபுரத்தில் 2 வயது மகளை கொன்று தாய் தற்கொலை!

Follow Us