AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.22 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!

Retired Bank Employee Scammed In Digital Arrest Scam | பெங்களூரில் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி முதியவரிடம் இருந்து ரூ.22 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை தொடர்புக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை போல பேசி அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.22 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jul 2026 07:46 AM IST

பெங்களூரு, ஜூலை 20 : பெங்களூரில் (Bengaluru) டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்யப்பட்டுள்ளதாக கூறி, ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை மிரட்டி சுமார் ரூ.22 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசா குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் முதியவருக்கு வந்த சிக்கல்

பெங்களூரில் உள்ள உடுப்பி டவுன் பகுதியில் வசித்து வருபவர் 76 வயதான ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர். இவரது செல்போனுக்கு ஜூலை 10, 2026 அன்று வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று முதியவர் பேசியுள்ளார். அப்போது காவல்துறை சீருடை அணிந்த ஒரு நபர் முதியவரிடம் பேசியுள்ளார். அவர் தன்னை முமையின் கொலாபா சைபர் கிரைம் காவலர் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடியின் ‘வந்தே மாதரம்’ செய்தியுடன் விண்ணில் பாயும் விக்ரம்-1 ராக்கெட்! சிறப்புகள் என்ன?

சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக மிரட்டிய கும்பல்

அந்த நபர் முதியவரிடம், மும்பையில் உள்ள உங்களது வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அதற்கு முதியவர், மும்பையில் தனக்கு வங்கி கணக்கு இல்லை என்று கூறியுள்ளார். அப்போது, உங்களது அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அந்த நபர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் என பலரும் முதியவரை தொடர்ப்புக்கொண்டு டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி.. மேலும் 12 பேர் சிகிச்சை!

ரூ.22 லட்சம் பணத்தை அனுப்பிய முதியவர்

அதுமட்டுமன்றி, முதியவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும் என கூறிய அந்த கும்பல் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனை நம்பிய முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.22 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் டிஜிட்டல் கைது மோசடி குறித்து தெரிய வந்த அந்த முதியவர், மோசடி கும்பலை தொடர்புக்கொண்டுள்ளார். அவர்களை தொடர்புக்கொள்ள முடியாமல் போன நிலையில், தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிந்துக்கொண்ட முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us