AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்வெளிக்கு பயணிக்கும் பிரதமர் மோடியின் அஞ்சல் அட்டை.. விக்ரம் 1 ராக்கெட்டில் சிறப்பு பேலோடு

விக்ரம்-1 ராக்கெட்டின் விண்வெளிப் பயணத்தில் இடம்பெறும் பேலோடுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக, பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பட எழுதிய அஞ்சல் அட்டையும் இடம்பெற உள்ளது. அந்த அஞ்சல் அட்டையில் \"வந்தே மாதரம்\" என்ற வார்த்தைகளை பிரதமர் மோடி கைப்பட எழுதியுள்ளார்.

விண்வெளிக்கு பயணிக்கும் பிரதமர் மோடியின் அஞ்சல் அட்டை.. விக்ரம் 1 ராக்கெட்டில் சிறப்பு பேலோடு
விண்வெளிக்கு பயணிக்கும் பிரதமர் மோடியின் அஞ்சல் அட்டை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Jul 2026 14:39 PM IST

விக்ரம் 1 ராக்கெட்டின் விண்வெளிப் பயணத்தில் இடம்பெறும் பேலோடுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக, பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பட எழுதிய அஞ்சல் அட்டையும் இடம்பெற உள்ளது. அந்த அஞ்சல் அட்டையில் வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை பிரதமர் மோடி கைப்பட எழுதியுள்ளார். பிரதமர் மோடி கையெழுத்திட்ட சிறப்பு அஞ்சல் அட்டை, விக்ரம் 1 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதனுடன்,விக்ரம் 1 திட்டத்தில் பணியாற்றிய குழுவினர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நலம் விரும்பிகள் கைப்பட எழுதிய செய்திகளும் விண்வெளிக்கு பயணிக்கின்றன.

விண்வெளிக்கு பயணிக்கும் பிரதமர் மோடியின் கையெழுத்து அஞ்சல் அட்டை

 

மிஷன் ஆகமன் திட்டத்தை பலரின் பங்களிப்புடன் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் தொழில்நுட்ப சாதனையை மட்டுமின்றி, தேசப்பற்று மற்றும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது. குறிப்பாக, வந்தே மாதரம் என பிரதமர் மோடி கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை விண்வெளிக்கு பயணிப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக கவனம் பெற்றுள்ளது.

விண்வெளித்துறையில் தடம் பதித்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் மேற்கொள்ளும் முதல் விண்வெளி பயணமான மிஷன் ஆகமன் எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அஞ்சல் அட்டைகள் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுப்பாதையை அடைய மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் அஞ்சல் அட்டையோடு, ஸ்கைரூட் குழு உறுப்பினர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகளின் அஞ்சல் அட்டைகளும் இந்த ராக்கெட்டில் பயணிக்கவுள்ளன. இத்திட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், இஸ்ரோவின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் இந்திய விண்வெளி வீரர்களும் கையால் எழுதப்பட்ட அஞ்சல் அட்டைகளை விண்வெளிக்கு அனுப்புகின்றனர். இந்தப் பயணத்தின் மூலம், இந்தியாவின் பல லஆண்டு கால விண்வெளி ஆய்வு வரலாற்றையும் அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பிரதிபலிக்கும் என்பது உறுதி.

Follow Us