AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : முதலிரவு அறையாக மாறிய ரயிலின் ஏசி கோச் கேபின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Couple Turned AC Coach Cabin Into First Night Room | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயிலின் முதல் ஏசி கோச்சில் உள்ள ஒரு கேபின் முதலிரவு அறையாக மாற்றப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : முதலிரவு அறையாக மாறிய ரயிலின் ஏசி கோச் கேபின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jul 2026 00:48 AM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இதில் சில வீடியோக்கள் வரவேற்பையும், சில வீடியோக்கள் கடுமையான விமர்சனங்களையும் பெறும். அந்த வகையில், ரயிலின் ஏசி முதல் பெட்டியில் உள்ள ஒரு அறை முதலிரவுக்கு தயார் செய்யப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலிரவு அறையாக மாறிய ரயிலின் ஏசி பெட்டி கேபின்

ஜூலை 06, 2026 அன்று மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல்ஹர்ஷா – நந்திகிராம் ரயிலில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தம்பதி ஒன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்து அந்த ஏசி பெட்டி கேபினை இவ்வாறு முதலிரவு அறையாக மாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறிய நிலையில், டிடிஇ பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : எம்பயர் ஸ்டேட் மேல் ஏறி ப்ரொபோசல்.. கைது செய்யப்பட்ட காதல் ஜோடி

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ரயிலின் ஏசி பெட்டியில் உள்ள ஒரு கேபின் அப்படியே அச்சு அசல் முதலிறவு அறையை போல அலங்கறிக்கப்பட்டுள்ளது. அந்த கேபினில் உள்ள படுக்கை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த அறை முழுவதும் மலர்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கேபினில் I Love You என்ற வாக்கியமும் எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஒரு நாள் வருமானமே போச்சு.. செயலி மூலம் இ ரிக்‌ஷாவை நிறுத்தியதால் கண்ணீர் மல்க பேசிய நபர்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us