இனி மருத்துவமனையில் கியூல நிற்க வேண்டாம்… வந்தாச்சு தமிழக அரசின் நலம் ஏஐ
'நலம் AI என்ற பெயரில் ஏஐ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை 22 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், 6192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மக்கள் Hi மெசேஜ் அனுப்பி OP சீட்டை முன்பதிவு செய்யலாம் என அறிவித்தார்.
சென்னை, ஜூலை 8 : ‘நலம் AI என்ற பெயரில் ஏஐ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை 22 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், 6192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மக்கள் Hi மெசேஜ் அனுப்பி OP சீட்டை முன்பதிவு செய்யலாம். தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நெஞ்சகப் பிரிவு மருத்துவரை அணுகவும் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவரின் மருந்துசீட்டு, ஆய்வக அறிக்கையை இணைய வழியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசின் ஏஐ சாட்பாட் அறிமுகம்
இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் ஜூலை 8, 2026 இன்று உரையாடளுடன் வடிவமைக்கப்பட்ட நலம்AI என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மாண்புமிகு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்துள்ளார்.




இதையும் படிக்க : தனியார் பள்ளிக் கட்டணம் எவ்வளவு?.. அறிவிப்புப் பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!
வெளியான அறிவிப்பு
#நலம்_AI | #NALAM_AI pic.twitter.com/ddHmyg1ZKn
— Office of Health Minister Tamil Nadu (@HM_TamilNadu) July 7, 2026
இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதிவு மற்றும் OP முன்பதிவை செய்து கொள்ள முடியும். இச்சேவை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலன் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் தான் இந்த நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க : புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்? தேதி குறித்த அமைச்சர் வெங்கட்ரமணன்!
இந்தப் புதிய சேவை தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் மக்களின் நேரத்தை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘நலம் ஏஐ’ சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.