ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்தது டிசி படக்குழு… எப்போது தெரியுமா?
DC Movie trailer release update here | தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள படம் டிசி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமான கதையையும் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படங்களையும் இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து மிகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ராக்கி. இந்தப் படத்தின் மூலமாகவே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் வசந்த் ரவி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவரை மற்றொரு பாணியில் இந்தப் படம் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சாணி காகிதம், கேப்டன் மில்லர் ஆகியப் படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடியே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் டிசி.




ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்தது டிசி படக்குழு:
இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக தற்போது அறிமுகம் ஆகி உள்ள படம் டிசி. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரிலீஸ் ட்ரெய்லரை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இந்திய சினிமாவில் மிஸ்டர் ஐஸ் சூர்யா சாரின் கண்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி
டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The world of #DC unfolds 🌹 Release Trailer from tomorrow 6 PM♥️💥#DC releasing worldwide August 7th@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir @PC_stunts @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss… pic.twitter.com/NXzbzxjAIV
— Sun Pictures (@sunpictures) July 29, 2026
Also Read… சின்னத்திரை சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?