மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா பிரச்சனையில் திருப்பம்- வைரலாகும் பதிவு!
Madhampatty Rangaraj And Joy Crizildaa: தமிழில் நடிகர் மற்றும் செஃப் ஆக பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கும் காஷ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா என்பவருக்கும் சமீபகாலமாக பிரச்சனைகள் நடந்துவருகிறது. அந்த வகையில் இவர்களின் பிரச்சனையில் தற்போது புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜாய் கிரிசில்டா பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் மெகந்தி சர்க்கஸ் மற்றும் பென்குயின் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி (Cook With Comali) என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்துவருகிறார். இவர் கடந்த 2025ம் ஆண்டில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா (joy crizildaa) என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், திருமணமான 2வது மாதத்திலே தாங்கள் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்திருந்தனர். பின் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஜாய் கிரிசில்டா வற்புறுத்தி திருமணம் செய்ய சொன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற மனைவி உண்டு. முதல் மனைவி இருக்கும்போதே, ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாய் கிரிசில்டாவின் வயிற்றிவளரும் குழந்தை, என் குழந்தை இல்லை என்றும், டிஎன்ஏ சோதனைக்கு பிறகே எது என் குழந்தையா? என நம்புவேன் அதற்கு பிறகே, அதற்கு பாதுகாப்பு அளிப்பேன் என தெரிவித்திருந்தார். அதன்படி டிஎன்ஏ சோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தைதான் என உறுதி செய்யப்பட்டு நீதிமன்ற்ம் தீர்ப்பு அளித்திருந்தது. தற்போது அது குறித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து – பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா:
View this post on Instagram
அந்த பதிவில் ஜாய் கிரிசில்டா, “டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகும் என்ன நடந்தது என கேட்பவர்களுக்கு, ஒரு புதிய தகவல். மாதம்பட்டி ரங்கராஜ், மகன் ராகா ரங்கராஜை தனது மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவரின் வாழ்நாள் முழுவதும், மகனுக்கு துணையாக நிற்பதாகவும் கூறியிருக்கிறார். அவர் ஒருபோதும் தனது மகன் ராகா ரங்கராஜை கைவிடமாட்டார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பலரும் ஜாய் கிரிசில்டாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் வீடியோ
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டாவின் வழக்கானது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அதிலும் ஜாய் கிரிசில்டாவிற்கு கிழந்தை பிறந்து கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகே, இந்த வழக்கில் நீதி கிடைத்துள்ளது. அதன்படி மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தையை ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் அந்த குழந்தையின் வாழ்நாள் முழுக்க அதை பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.