தளபதி விஜய்யின் தவெக-வில் இணைந்த சீரியல் நடிகர்கள்.. அட யார் யார் தெரியுமா?
Popular Tamil Serial Actors In TVK Party: தமிழில் உச்ச நட்சத்திர நடிகராகவும், தற்போது அரசியல்வதியாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் கட்சியாக இருந்துவருவதுதான் தமிழக வெற்றிக் கழகம். அந்த வகையில் விஜய்யின் கட்சியின் ஆதரவாக இருந்துவரும் சீரியல் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் சினிமா பிரபலங்கள் எந்த அளவிற்கு பிரபலமோ, அதுபோல சின்னத்திரை நடிகர்களும் (Tamil serial actors) பிரபலமானவர்கள். தமிழில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெளியாகும் தொலைக்காட்சிகள் சன் டிவி (Sun TV), விஜய் டிவி (Vijay TV) மற்றும் ஜீ தமிழ். இந்த மூன்று தொலைக்காட்சிகளும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த வகையில் இதில் சீரியல்கள் டிஆர்பி போட்டியி என்றாலே விஜய் டிவிக்கும் மற்றும் சன் டிவிக்கும் என அனைவருக்குமே தெரிந்தது. இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சிலரும் அரசியலில் இருப்பது உண்டு.
தற்போது தளபதி விஜய் (Thalapathy Vijay) அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகம் (Thamizhaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், அதில் சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்துள்ளனர். அந்த விதத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக கட்சியில் இணைந்துள்ள சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: அஜித் சார் எப்போது அழைத்தாலும் படத்திற்கு தயார்.. இயக்குநர் மனு ஆனந்த் பகிர்ந்த விஷயம்!
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த சீரியல் நடிகர்கள் யார்:
பிக்பாஸ் மற்றும் சீரியல் நடிகரான தினேஷ் கோபாலசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலை நடித்திருந்த நடிகை ரட்சித்தாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் TVK -வில் இணைந்துள்ளாராம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் விஜய்யுடன் கட்சியில் இணைந்ததற்கான காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாரணாசி படத்தில் அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்
தவெக-வில் இணைந்த சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இவரை தொடர்ந்து பிக் பாஸ் புகழ் மற்றும் சீரியல் நடிகையாக இருந்துவரும் தாமரையும் இணைந்துள்ளாராம். இவர் சின்ன மருமகள் என்ற சீரியலில் நடித்துவந்த நிலையில், தற்போது அதிலிருந்து அவர் விலகியுள்ளாராம். மேலும் தளபதி விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருவதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
நடிகை தாமரை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தினி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்த நிலையில், மக்களிடையே மிகவும் பிரபலமானார். அவரை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமாவும் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார். இவர்களை அடுத்ததாக சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு சென்ற நடிகை வாணிபோஜனும் தான எப்போதும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு பல சீரியல் நடிகர்களும் தங்களின் ஆதரவை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.