Gold : ஒரே நாளில் ரூ.1,240 குறைந்த தங்கம் விலை.. தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?
Is This Right Time To Invest In Gold | இன்று (ஜூலை 28, 2026) தங்கம் விலை ரூ.1,240 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜுலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) நிலையற்ற தன்மையில் தான் உள்ளது. காரணம், ஒருநாள் தங்கம் விலை உயர்வை சந்திக்கும் நிலையில், மறுநாள் தங்கம் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர்ந்து மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தான், சென்னையில் இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய தங்கத்தின் நிலவரம் என்ன, இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம் விலை
2024, 2025 ஆண்டுகளை போல 2026 ஆம் ஆண்டின் தொடக்கமும் தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக தான் அமைந்தது. காரணம் , 2026 தொடக்கத்தில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்தது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஈரான் போர் காரணமாக தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்திக்க தொடங்கியது.
இதையும் படிங்க : “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!




ஈரான் போரின்போது கச்சா எண்ணெய் உச்சத்தை தொட்ட நிலையில், தங்கம் மந்த நிலைக்கு சென்றது. இதற்கிடையே அமெரிக்க டாலரின் மதிப்பும் வலுவடைய தொடங்கியது. இந்த நிலையில் தான் ஜூன் மாதத்தில் தங்கம் கடும் சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை ரூ.13,000-க்கு குறைந்தது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது.
தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
சென்னையில் இன்று (ஜூலை 28, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.235-க்கும், சவரனுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு சவரன் ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!
தங்கம் தற்போதைய சூழலில் மந்த நிலையில் இருந்தாலும், ஆண்டு இறுதிக்குள் மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்கள், தாராளமாக முதலீடு செய்யலாம். தங்கம் தற்போது விலை குறைவாக உள்ள நிலையில், முதலீடு செய்து வரும் காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.