AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் வீடியோ

Kattalan Tamil Trailer Cubes | மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ள படம் காட்டாளன். இந்த காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். அந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் வீடியோ
காட்டாளன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Apr 2026 15:42 PM IST

மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் காட்டாளன். இந்தப் படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், பார்த் திவாரி, கபீர் துஹான் சிங், சுனில், துஷாரா விஜயன், ராஜ் திரன்தாசு, ஜெகதீஷ், சித்திக், ஷோன் ஜாய், ஆன்சன் பால், ஹிப்ஸ்டர், ஹனான் ஷா, பிபேக் தாபா மற்றும் ஷனூத் இப்ராஹிம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஷரீஃப் முஹம்மது தயாரித்து உள்ளார். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மற்றும் பி. அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இணைந்து இந்த காட்டாளன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத்:

மேலும் காட்டாளன் படத்தின் மலையாள ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அந்த ட்ரெய்லரை ஷேர் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நிச்சயமாக வெற்றியடையும் என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தமிழ் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வாரணாசி படத்தில் அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்

இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காவல் துறை அதிகாரியக ஷேன் நிகாம்… ட்ரிடம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us