இன்று கோலாகலமாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
Vishwanath And Sons movie pre-release event | நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை கேரளாவில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்களுடன் பணியாற்றி வந்த நடிகர் சூர்யா தற்போது தென்னிந்திய மொழி இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக தெலுங்கு சினிமா இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் சூர்யா கூறிய போது ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகும் போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யவின் 46-வது படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இந்தப் படத்தின் ஒன் லைன் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது.




இன்று நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:
மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
KERALA… Let’s make some noise 🔥🔥
Team #VishwanathAndSons is coming to meet you Today ❤️🔥
6 PM | Lulu Mall, Trivandrum. #VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi @Banglan16034849… pic.twitter.com/PQY4N7mvEH
— Sithara Entertainments (@SitharaEnts) August 8, 2026
Also Read… அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார்