AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த இதயம் முரளி ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Idhayam Murali Movie OTT Release Update | நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த இதயம் முரளி ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2026 17:19 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் அதர்வா சுமார் 16 ஆண்டுகளாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இதயம் முரளி படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் அவரது தந்தை முளியை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவு கூறும் வகையில் உள்ளது குரிப்பிடத்தக்கது.

முன்னதாக அதர்வாவின் தந்தை முரளி நாயகனாக நடித்தப் படம் இதயம். இந்தப் படத்தில் அவர் தனது காதலை காதலிக்கும் பெண்ணிடம் கடைசி வரை கூற மாட்டார். அதே போலவே இந்தப் படத்தில் அதர்வா தனது காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்ல முடியாமல் தவிப்பார். இதன் காரணமாகவே இந்தப் படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த இதயம் முரளி ஓடிடி ரிலீஸ் எப்போது?

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Suriya: Couple Goals.. உடற்பயிற்சி குறித்து ரகசியத்தை சொன்ன சூர்யா!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Follow Us