Priyanka Mohan: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரியங்கா மோகன்?
Priyanka Mohan In Arasan Movie: தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பில், தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவர் அரசன் படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
கன்னடம் சினிமாவின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மேட் இன் கொரியா (Made In Korea). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின், இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தமிழில் கவினுக்கு (Kavin) ஜோடியாக புது படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் மஞ்சணத்தி படத்திலும் நடித்துவருகிறார். அந்த விதத்தில் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில், சிலம்பரசன் (Silambarasan) நடித்துவரும் அரசன் (Arasan) படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதில் யோகலட்சுமி நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது.
அந்த விதத்தில், நேற்று (04/09/2026) வெற்றிமாறனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் அரசன் படத்தில் இணைந்து நடித்துவருவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: படகுப் பந்தயக் காட்சிகளுடன்… வெளியானது சூரியின் மண்டாடி படத்தின் ட்ரெய்லர்!
அரசன் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதாக வைரலாகும் பதிவு:
#Arasan …🤯 pic.twitter.com/YAMS0AGh7e
— Movie Tamil (@_MovieTamil) September 5, 2026
அரசன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
இப்படமானது சிலம்பரசனின் 49வது படமாக அறிவிக்கப்பட்டு, பின் அரசன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் விஜய் சேதுபதியும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துவரும் நிலையில், அனிருத் இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் நிறைவடையவில்லை.
இதையும் படிங்க: தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர் டிரெய்லர் – எங்கெல்லாம் தெரியுமா?
இந்த படத்தில் படத்தின் ஷூட்டிங்குடன், கென் கருணாஸ் நடிக்கும் ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது வட சென்னை பட பின்னணியில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது. இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியில் அல்லது 2027ம் ஆண்டு பொங்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், அப்போது வெளியாகாது என சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேலும் அரசன் படத்தை 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தற்போது இதில் பிரியங்கா மோகன் இணைந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.