AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் படத்தில் வசனம் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!

Nainar Criticizes CM Vijay Speech : தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருப்பது படத்தில் வசனங்களை அடுக்கடுக்காக பேசுவது போல கத்தி கூச்சல் போட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

முதல்வர் விஜய் படத்தில் வசனம் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!
முதல்வர் விஜய்- நயினார் நாகேந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Sep 2026 18:49 PM IST

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை மீது முதல்வர் விஜய் பதிலளித்து பேசி இருந்தார். இதில், திமுகவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார். முதல்வரின் பதிலுரைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதில், தமிழக சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டூடியோ கிடையாது முதல் அமைச்சரே. அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கட்சியின் ஆச்சரிய குறிகள் கிடையாது. தமிழக வெற்றி கழகத்திற்கு 2 அமைச்சர்களை வழங்கிய கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 கொலைகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் தவெக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஒரே நாளில் 2 படுகொலைகள் நடந்துள்ளன. தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

காவல்துறை மீது நம்பிக்கை இழந்த மக்கள்

பொதுமக்களை சில காவலர்கள் மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். இதனால், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சட்டப்பேரவைகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இந்த அவலங்களுக்கெல்லாம் முறையாக பதில் அளித்து இருக்க வேண்டும். தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்குக்கு முழுமையாக முதல்வர் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!

கத்தி கூப்பாடு போட்டுள்ளார் முதல்வர் விஜய்

தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் விடுத்து விட்டு எனக்கும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கும் தொடர்பு இல்லை என்ற  திரைப்படத்தில் வருவது போன்ற அதிரடி அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளீர்கள். இது அநாகரிகமான அரசியல் ஆகும். மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். மக்கள் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே.

தமிழக மக்களுக்கு தந்தை- மகன் கதை தேவையில்லை

தந்தை- மகன் கதை எதுவும் தமிழக மக்களுக்கு தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் விஜய் இன்று ஆவேசமாக பேசியிருந்தார். இதற்கு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சினிமா வசனங்களை அடுக்கடுக்காக பேசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: “தவெக-வினரையும் கண்டியுங்கள்!”.. பேரவையில் முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வைத்த கோரிக்கை!

Follow Us