கோவையில் துணிச்சலான கொள்ளை.. பூட்டிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!!
Coimbatore Robbery: கோவையில் பூட்டியிருந்த ஆடிட்டர் வீட்டிற்குள் புகுந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்ளையடித்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையர்கள் அந்த வீட்டிலேயே 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டுத் தூங்கிச் சென்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கோவை, செப்டம்பர் 07: கோவை மாநகரில் பூட்டியிருந்த ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்ளையடித்த கும்பலை வெரைட்டி ஹால் காவல் துறையினர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்ததோடு மட்டுமன்றி, வீட்டின் உரிமையாளர்கள் இல்லாததைப் பயன்படுத்தி, அந்த வீட்டிலேயே சுமார் ஐந்து நாட்கள் தங்கி, சமையல் செய்து சாப்பிட்டுத் தூங்கிச் சென்ற கொள்ளையர்களின் துணிச்சலான செயல் காவல் துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை சம்பவம் நடந்த பின்னணி:
கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த சேஷகிரி என்பவர் ஆடிட்டராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், மகனைப் பார்ப்பதற்காகச் சேஷகிரி கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு பெங்களூரு சென்றிருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பெங்களூருவிலிருந்து கோவை திரும்பிய சேஷகிரி, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பூஜை அறை மற்றும் சமையலறையில் இருந்த சுமார் 9 கிலோ வெள்ளித் தட்டுகள், வெள்ளி பூஜைப்பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளைப் பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!
மயிலாடுதுறையில் சூழல் நட்பு வண்ண விநாயகர் சிலைகள் தயார்!!
தொடர் விடுமுறை.. தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
