AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.. மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டம்!

Tvk Meeting CPM Not Participate : தமிழக வெற்றிக் கழக ஆதரவு கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அந்த கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், முன்னாள் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர் .

தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.. மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டம்!
சிபிஎம்-தவெக
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 08 Sep 2026 12:22 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு கட்சிகள் கூட்டம் நாளை புதன்கிழமை ( செப்டம்பர் 9- ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அந்தக் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மற்றும் முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தனர். இது தொடர்பாக சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாதவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு நேரில் வந்து தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம் செப்டம்பர் 9- ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதற்கு, கட்சியின் தலைமையிடம் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தோம். தற்போது, இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக ஆலோசனை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்

தமிழக வெற்றி கழகத்திற்கு வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளிப்போம். தவெகவின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை பொருத்தவரை அவர்கள் என்ன முன்மொழிவு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் தமிழர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக அதற்கு இடம் தருவது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிப்போம். அதனை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் முடிவாகும். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆலோசனை வழங்குவோம். திமுக மீது இருக்கும் கோபத்தை சலட்டுமாதிரி தவெக அமைச்சர்கள் பேசுவது தேவையில்லாதது.

மேலும் படிக்க: பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!

ஊழல் கோப்புகள் தொடர்பாக முதல்வர் பேசவில்லை

முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மேதையில் 3 ஊழல் ஒப்புதல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசாமல், தேவையில்லாததை பேசியுள்ளார். தமிழக சட்டமன்றம் மக்களின் வரிப்பணத்தில் நடைபெறுகிறது. இதனால், மக்களுக்கு தேவையானவற்றை பேரவையில் பேசியிருக்க வேண்டும். சர்க்காரியா கமிஷன், மிசா ஆகியவை தொடர்பாக தவெக அமைச்சர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்கு நாங்கள் சொல்லும் ஆலோசனையாகும்.

தமிழக சட்டமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது

சட்டமன்ற நேரத்தை வீணைக்காமல் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் பேசியதை உலகமே பார்த்துள்ளது. அந்த நேரங்கள் அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக ஆதரவு கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திமுக எம்.எல்.ஏ-க்களால் எனக்கு High Pressure ஆகிவிட்டது… சபாநாயகர் பேச்சால் அவையில் சிரிப்பலை!

Follow Us