AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்த தலைமுறை ராக்கெட் – நெல்லையில் இஸ்ரோ மேற்கொண்ட சோதனை வெற்றி

ISRO Semi Cryogenic Engine Test : அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளுக்காக இஸ்ரோ தயாரித்து வரும் செமி கிரையோஜெனிக் என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிக்கிள் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிளில் நடத்தப்பட்ட தொடர் 9 ஆவது ஹாட் டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைமுறை ராக்கெட்  – நெல்லையில் இஸ்ரோ மேற்கொண்ட சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2026 18:09 PM IST

திருநெல்வேலி, செப்டம்பர் 9 : அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளுக்காக இஸ்ரோ தயாரித்து வரும் செமி கிரையோஜெனிக் என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிக்கிள் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிளில் நடத்தப்பட்ட தொடர் 9 ஆவது ஹாட் டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக எரிபொருளாக திரவ ஆக்சிஜன் மற்றும் அதி-சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இஸ்ரோ மேற்கொண்ட சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வளாகத்தில் தனது அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளுக்காக தயார் செய்து வரும் செமி-கிரையோஜெனிக் எஞ்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிள் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையில் 200 டன் முழு உந்துதல் திறனில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிள்இயக்கப்பட்டது. இந்த ஹாட் டெஸ்ட் மொத்தம் 35 விநாடிகள் நடைபெற்றது. இதில் 200 டன் முழு உந்துதல் திறனில் 5 விநாடிகள் என்ஜின் பவர் ஹெட் இயங்கியது.

இதையும் படிக்க : கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியானதற்கு அதிகாரிகளே பொறுப்பு – வெளியான பரபரப்பு அறிக்கை

இது பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிளில் நடத்தப்பட்ட தொடர் 9 ஆவது ஹாட் டெஸ்ட் ஆகும். இதற்கு முன்பு 94 டன், 120 டன் மற்றும் 175 டன் உந்துதல் அளவுகளில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது முதன்முறையாக 200 டன் முழு உந்துதல் அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 35 விநாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனையில், 200 டன் முழு உந்துதல் நிலையில் என்ஜின் பவர் ஹெட் 5 விநாடிகள் இயக்கப்பட்டது. சோதனையின்போது பதிவான அனைத்து என்ஜின் அளவுருக்களும் எதிர்பார்த்தபடியே இருந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

அதனைத் தொடர்ந்து, வருங்காலத்தில் நீண்ட நேர சோதனைகளை மேற்கொள்ளும் வகையில், குறைந்த அழுத்த தொடக்கத் தொட்டியில் இருந்து நடுத்தர அழுத்த இயக்கத் தொட்டிக்கு எரிபொருள் விநியோகத்தை மாற்றும் செயல்முறையும் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. இதன் மூலம், LVM3 ராக்கெட்டின் சுமை ஏற்றிச் செல்லும் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இந்த புதிய செமி-கிரையோஜெனிக் என்ஜினில் எரிபொருளாக திரவ ஆக்சிஜன் மற்றும் அதி-சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us