Team India: பும்ராவிற்கு காயம் சரியானதா..? சோதிக்கப்போகும் பிசிசிஐ!
Bumrah Fitness Update: டெல்லியில் அணியுடன் இணைவதற்கு முன்பு பும்ரா ஒரு போட்டி மாதிரி சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனை அவரது விளையாடும் திறனையும் உடற்தகுதியையும் மதிப்பிடும். பும்ராவைத் தவிர, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் இந்தச் சோதனையை மேற்கொள்வார்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், பும்ரா விளையாடும் நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பும்ரா இந்திய அணியில் (Indian Cricket Team) இணைவதற்கு முன்பு பும்ரா ஒரு போட்டி மாதிரி சோதனையில் பங்கேற்க வேண்டும். அப்போது, பும்ரா முழு உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஒரு வீரரை பிசிசிஐ (BCCI) தயாராக வைத்துள்ளது. வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியே மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், பும்ரா 3 போட்டிகளிலும் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு, உடற்தகுதி சோதனைக்குப் பிறகே எடுக்கப்படும்.




ALSO READ: இந்தியாவும் ஜப்பானும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறை மோதல்.. அதுவும் இந்த சிறப்பு நாளிலா..?
மாதிரி சோதனை:
Jasprit Bumrah might have to prove his fitness before New Zealand Test Series! 👀
The Indian cricket board wants Jasprit Bumrah to test his workload in a first-class game before returning to Test cricket. The selectors, led by Ajit Agarkar, want Jasprit Bumrah to get some… pic.twitter.com/lUc7MQTtPT
— CREX (@Crex_live) September 4, 2026
கிடைத்த தகவலின்படி, டெல்லியில் அணியுடன் இணைவதற்கு முன்பு பும்ரா ஒரு போட்டி மாதிரி சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனை அவரது விளையாடும் திறனையும் உடற்தகுதியையும் மதிப்பிடும். பும்ராவைத் தவிர, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் இந்தச் சோதனையை மேற்கொள்வார்கள்.
இந்த 4 வீரர்களும் மருத்துவ ரீதியாக தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ மருத்துவக் குழு அறிவித்துள்ளது, இருப்பினும், ஒரு போட்டி போன்ற சூழ்நிலையில் இந்த 4 வீரர்களின் பரிசோதனை அவசியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் இன்று முதல் 2026 செப்டம்பர் 4 முதல் 9 வரை சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ALSO READ: விலகும் அஜித் அகர்கர்..? கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? பிசிசிஐ விளக்கம்!
யாருக்கு வாய்ப்பு..?
ஜஸ்பிரித் பும்ரா இந்தச் சோதனையில் முழுமையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவரால் விளையாட முடியாவிட்டாலோ, வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். பும்ராவின் மாற்று வீரராக பிரின்ஸ் யாதவ் தேர்வாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
முன்னதாக தொடை தசைநார் காயத்தால் அவதிப்பட்ட பிரின்ஸ் யாதவ், தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும்.