IND W vs PAK W: மீண்டும் கைகுலுக்காத இரு நாட்டு கேப்டன்கள்.. வைரலாகும் வீடியோ!
Harmanpreet Kaur Fatima Sana Handshake: ஹர்மன்பிரீத் கவுரும் , பாத்திமா சனாவும் நேருக்கு நேர் நின்றனர். அப்படியிருந்தும், இருநாட்டு கேப்டன்கள் முறைப்படியான கைகுலுக்கலைச் செய்யவில்லை. இது, போட்டிக்கு முன்பே சமூக ஊடகங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
2026 மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் (Womens Asia Cup 2026) துபாயில் இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் (IND W vs PAK W) அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இருப்பினும், டாஸின் போது, இரு அணி கேப்டன்களும் மீண்டும் கைகுலுக்கவில்லை. ஹர்மன்பிரீத் கவுரும் , பாத்திமா சனாவும் நேருக்கு நேர் நின்றனர். அப்படியிருந்தும், இருநாட்டு கேப்டன்கள் முறைப்படியான கைகுலுக்கலைச் செய்யவில்லை. இது, போட்டிக்கு முன்பே சமூக ஊடகங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சனா ஒரு பெரிய ஸ்கோரை இலக்காகக் கொண்டுள்ளார். தங்கள் அணியின் பந்துவீச்சு வலுவாக இருப்பதால், முதல் ரன்னை எடுப்பது இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய மகளிர் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை இந்திய மகளிர் அணி 3 விக்கெட்களை இழந்து 8.4 ஓவர்களில் விரட்டி பிடித்தது.




ALSO READ: சுழட்டியடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்.. 55 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான் மகளிர்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்:
DRAMA CONTINUES…!
No handshake between Pakistan captain Fatima Sana and India captain Harmanpreet Kaur once again at the toss. pic.twitter.com/aSoHgBBcwe
— Mian Ahmad (@aHmADmIaN150) September 5, 2026
2025-ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வீரர்கள் எதிர் அணி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக இந்திய அரசும் பிசிசிஐ-யும் வீரர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. மேலும், டாஸின் போது நிலவும் பாதுகாப்பு மற்றும் பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, பல சமயங்களில் போட்டி அதிகாரிகள் இரு அணி கேப்டன்களிடம் சம்பிரதாயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் போட்டி ஹர்மன்பிரீத்துக்கும் ஒரு சிறப்பான போட்டியாகும். டி20 போட்டிகளில் 150-வது முறையாக அவர் அணியை வழிநடத்துகிறார். இதை அவர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டார். இருப்பினும், சாதனைகளை விட களத்தில் போட்டிகளில் வெற்றி பெறுவதே அவருக்கு மிகவும் முக்கியமானது.
ALSO READ: டாஸ் போட்டதும் கைக்கு வந்த உலக சாதனை.. கேப்டனாக கலக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்..!
2026 ஆசியக் கோப்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடும் XI.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (வி.கே.), தீப்தி சர்மா, பிரேமா ராவத், நந்தனி சர்மா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்.
பாகிஸ்தான் மகளிர் அணி:
முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஷவால் சுல்பிகர், குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், சதாப் ஷமாஸ், பாத்திமா சனா (கேப்டன்), உம்-இ-ஹானி, அய்மன் பாத்திமா, துபா ஹசன், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.