IND W vs PAK W: தோல்வி விரக்தி! இந்திய பிளேயர்களை மோசமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்!
2026 Womens Asia Cup: இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு பாகிஸ்தான் அணி களத்தில் நிலைத்து நிற்கத் திணறியது. மறுபுறம், அணியின் மோசமான ஆட்டத்தைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள், இந்திய வீராங்கனைகளிடம் மோசமான நடந்துகொள்ளத் தொடங்கினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
2026 ஆசிய கோப்பையின் (2026 Womens Asia Cup) 9வது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (IND W vs PAK W) மோதின. இந்த போட்டியானது கடுமையானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு இடமளிக்காத இந்திய அணி, ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தானை வெறும் 55 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியை வென்றது. இருப்பினும் இந்த போட்டியின் போது, மைதானத்தில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டை கிண்டல் செய்தனர். தற்போது அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் பாகிஸ்தானியர்களின் இந்த அணுகுமுறைக்கு இந்தியர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ALSO READ: 56 ரன்கள் டார்க்கெட்.. 3 விக்கெட் வீழ்ந்தாலும் விரட்டி பிடித்த இந்திய மகளிர்!




பாகிஸ்தான் ரசிகர்கள் செய்தது என்ன..?
“𝗟𝗮𝗱𝗸𝗮 𝗸𝗵𝗲𝗹 𝗿𝗮𝗵𝗮 𝗵𝗮𝗶… 𝗹𝗮𝗱𝗸𝗮. 𝗢𝘆𝗲 𝗹𝗮𝗱𝗸𝗲, 𝗶𝗱𝗵𝗮𝗿 𝗮𝗮!” — Pakistani fans 😭
Pakistani fans kept trolling Kranti Gaud by calling her “BOY” during the India Women vs Pakistan Women match.
Meanwhile, their own team got bowled out for just 55 runs.… pic.twitter.com/QxyRGdmzJc
— Mukku (@Cric_Mukku) September 6, 2026
ஒருபுறம், இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு பாகிஸ்தான் அணி களத்தில் நிலைத்து நிற்கத் திணறியது. மறுபுறம், அணியின் மோசமான ஆட்டத்தைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள், இந்திய வீராங்கனைகளிடம் மோசமான நடந்துகொள்ளத் தொடங்கினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இதனால், கேலரியில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள், அணியின் மோசமான ஆட்டத்தைப் பார்க்க முடியாமல், இந்திய அணி வீரர்களை அருவருப்பான முறையில் விமர்சிக்கத் தொடங்கினர். தற்போது, அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏய் பையனே, இங்கே வா..
வைரலான அந்த வீடியோவில், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் கிராந்தி கௌட் எல்லைக்கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சில பாகிஸ்தான் ரசிகர்கள் கிராந்தியைக் குறிவைத்து, ‘ஏய் பையன், ஏய் பையன், பையன் கிரிக்கெட் விளையாடுகிறான். ஏய் பையன், இங்கே வா, இந்தியா எப்படி ஜெயிக்கிறது என்று எனக்குத் தெரியும். இந்தப் பையனை வைத்து இந்தியா போட்டியில் ஜெயிக்கிறது’ என்று கூறியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரல் வீடியோவில் இதுபோன்ற கருத்துக்களைக் கூறியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ALSO READ: மீண்டும் கைகுலுக்காத இரு நாட்டு கேப்டன்கள்.. வைரலாகும் வீடியோ!
இந்திய அணி எளிதான வெற்றி:
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இருப்பினும், பாகிஸ்தான் அணியால் 100 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. இறுதியில், பாகிஸ்தான் மகளிர் அணி 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலக்கை துரத்திய இந்தியா, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.