AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather report: தமிழகத்தில் நாளை முதல் செப்.12 வரை பரவலாக மழை – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழகத்தில் செப்டம்பர் 7, 2026 நாளை முதல் செப்டம்பர் 12, 2026 வரை 6 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather report: தமிழகத்தில் நாளை முதல் செப்.12 வரை பரவலாக மழை – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Sep 2026 17:40 PM IST

சென்னை, செப்டம்பர் 6 : தமிழகத்தில் செப்டம்பர் 7, 2026 நாளை முதல் செப்டம்பர் 12, 2026 வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வந்த நிலையில் , உள் தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உள் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து வெளியான அறிவிப்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 7, 2026 நாளை முதல் செப்டம்பர் 9, 2026 தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10, 2026 முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் செப்டம்பர் 11, 12, 2026 ஆகிய 2 நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!

உள் தமிழகத்தில் செப்டம்பர் 7, 2026 நாளை முதல் செப்டம்பர் 10, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செப்டம்பர் 7, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us