AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!

Diwali Train Ticket Booking Begins Today: வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. நவம்பர் 5-ம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு குறித்த விவரங்கள் உள்ளே.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Sep 2026 07:26 AM IST

செப்டம்பர் 06: தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னையில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். இத்தகைய பண்டிகைக் காலப் பயண நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் தங்களது பயணங்களை எவ்வித சிரமமுமின்றி முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவும் இந்திய ரயில்வே வாரியம் வழக்கமாக 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் முறைப்படி தொடங்குகிறது.

இதையும் படிக்க: Tamil Nadu Weather Alert: ஒருபக்கம் வெயில்.. மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!

முன்பதிவு அட்டவணை மற்றும் பயண விவரங்கள்:

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான நவம்பர் 5-ந் தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்குப் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 6-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு நாளைய தினமும், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு அதற்கு அடுத்த நாளிலும் தொடர்ச்சியாக நடைபெறும். பண்டிகை நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளுக்கான முன்பதிவுத் தேதிகளும் அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் முறைகள்:

பொதுமக்கள் தங்களது பயணச் சீட்டுகளை IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம், செல்போன் செயலி மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் செயல்படும் டிக்கெட் முன்பதிவு மையக் கவுண்ட்டர்கள் மூலமாக நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகைக் காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர அதிக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது விவரங்களைச் முன்கூட்டியே ஆயத்தமாக வைத்துக்கொண்டு விரைவாக முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தட்கல் முன்பதிவு வசதிகள்:

வழக்கமான ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காத பயணிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும், பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகளும், அதற்கான முன்பதிவுத் தேதிகளும் விரைவில் கட்டம் கட்டமாக வெளியிடப்படும்.

இதையும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!

இதுமட்டுமின்றி, பயணத்திற்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு ஏசி அல்லாத சாதாரண வகுப்புகளுக்கும் தொடங்கப்படும் ‘தட்கல்’ மற்றும் ‘பிரீமியம் தட்கல்’ முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகள், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க ‘UTS on Mobile’ செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பயணச் சீட்டுகளைப் பெற்று எவ்வித சிரமமுமின்றிப் பயணிக்கலாம்.

Follow Us