ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே… 9 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் மெர்சல் படம்
9 Years Of Mersal Movie | இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் பட்ம மெர்சல். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் பல இயக்குநர்களுடன் பணியாற்றி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான இயக்குநராக வலம் வருவர் இயக்குநர் அட்லி. இயக்குநர் அட்லி மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் இதுவரை மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி தெறி, மெர்சல் மற்றும் பிகில் என இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து ஒரு ஹாட்ரிக் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய்க்கு மூன்று வெற்றியை அட்லி கொடுத்த பிறகே அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கானை இயக்க வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் கடந்த 10-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் அப்பா மற்றும் மகன்கள் என மூன்று வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




9 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் மெர்சல் படம்:
இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் மூன்று வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒரு அழுத்தமான கதையை சுமர்ந்து இருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவரது இசையில் வெளியான ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே என்ற பாடல் தற்போது வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. மேலும் இந்த மெர்சல் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Chiyaan Vikram: குரங்குடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்த சியான்.. இணையத்தில் ரசிகர்களை கவரும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#9YearsOfAalaporaanThamizhan 💖#AalaporaanThamizhan #Mersal @actorvijay @arrahman @Lyricist_Vivek pic.twitter.com/hwEor282PO
— King of Kollywood (@kingofkwood) August 9, 2026
Also Read… ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ