AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் காதலரை அந்நியன் பட கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் வீடியோ!

Actress Anupama Parameswaran talks about her Ex - love: கடந்த சில நாட்களாக நடிகை அனுபமா பரமேசுவரன் தொடர்ந்து தனது காதல் தோல்வி மற்றும் முன்னாள் காதலர் தொடர்பாக பேட்டி அளித்து வரும் நிலையில் அவர் பேசுவது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

முன்னாள் காதலரை அந்நியன் பட கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் வீடியோ!
அனுபமா பரமேசுவரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2026 11:36 AM IST

மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனுபமா பரமேசுவரன். கடந்த 2015-ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை சினிமாவில் தொடங்கி இருந்த நிலையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பலப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகன்களுக்கு நாயகியாக மட்டும் இன்றி நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என தொடர்ந்து மூன்று மொழிகளிலும் மொத்தம் 6 படங்களில் நடித்து உள்ளார். அந்த 6 படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் மரீசிகா என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் பிசியான நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை அனுபமா தொடர்பான சினிமா செய்திகள் மட்டும் இன்றி அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிக அளவில் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னாள் காதலரை அந்நியன் படத்துடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா:

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் தொடர்ந்து அவரது காதல் தோல்வி மற்றும் முன்னாள் காதலர் குறித்து பேட்டிகளில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் பேசிய போது, நாசிஸ்டிக் அப்யூஸ் அல்லது சுய-மோக ஆளுமை கொண்ட ஒருவரின் கொடுமை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, அந்நியன் திரைப்படத்தில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களை உங்கள் வாழ்க்கையில் கற்பனை செய்து பாருங்கள். ஒரு நாள், அவர் ரெமோவாக இருப்பார். அப்போது, ​​இப்படிப்பட்ட ஒருவர் என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? இது நிஜம்தானா? கனவு போல இருக்கிறதே! என்று உங்களுக்குத் தோன்றும்.

அடுத்த நாளோ, நீங்கள் அந்நியனைப் பார்ப்பீர்கள். அவர் எவ்வளவு கொடூரமானவராக இருப்பார் என்றால், யாராவது உங்களைக் கத்தியால் குத்துகிறார்கள் என்று அவரிடம் சொன்னால் கூட, அவர் தன் தலையைத் திருப்பிக் கூடப் பார்க்க மாட்டார். ஆனால் அதற்கு அடுத்த நாளோ, அவரே அம்பியாக மாறிவிடுவார். இனிமேல் அப்படி இருக்கமாட்டேன் என்று கெஞ்சி, மன்றாடி, வாக்குறுதி அளிப்பார். மீண்டும் அந்த அதீத அன்பு வெளிப்பாடு தொடங்கும், இறுதியில் ஒரு குழந்தையைப் போல அவர் அழுதுகொண்டிருப்பார்.

இதே சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும். அவர்கள் உங்களை அவர்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்களும் அவர்களை முதன்மைப்படுத்தத் தொடங்கும்போது, ​​அது ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது. காலப்போக்கில், அந்தப் பிணைப்பு ஒரு போதையைப் போல அடிமையாக்கும் நிலைக்கு மாறிவிடக்கூடும் என்றும் அனுபமா தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது!

இணையத்தில் வைரலாகும் அனுபமா பரமேசுவரன் பேச்சு:

Also Read… Radhika Sarathkumar: சாய் பல்லவியை போல.. மமிதா பைஜூவின் நடிப்பு தன்னை கவர்ந்த விஷயம் குறித்து பகிர்ந்த ராதிகா சரத்குமார்!

Follow Us