AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sigma: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட 2வது பாடல் ரிலீஸ்? – படக்குழு அறிவிப்பு!

Sigma Movie 2nd Single Release: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் எஸ் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் 2வது பாடல் அய்யயோ அம்மாடி பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Sigma: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட 2வது பாடல் ரிலீஸ்? – படக்குழு அறிவிப்பு!
சிக்மா திரைப்படத்தின் 2வது சிங்கிள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Aug 2026 14:14 PM IST

தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா (Sigma). இதை ஜேசன் சஞ்சய் (Janson Sanjay) இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக வெளியேரிய நிலையில், தற்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக நுழைந்துள்ளார். இவரின் இயக்கத்தில் முதல் படமாக இந்த சிக்மா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் (Thaman S) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் “சிக்மா ஸ்டைல் “என்ற படமானது, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த பாடல் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. “அய்யயோ அம்மாடி” (Ayyayo Ammaadi) என்ற இப்பாடலின் ரிலீஸ் குறித்து போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: மற்ற நடிகர்கள் தோல்வியடைந்த அரசியலில் விஜய் வெற்றி பெற்றது எப்படி?- விஷால் விளக்கம்!

சிக்மா பட அய்யயோ அம்மாடி பாடல் ரிலீஸ் எப்போது:

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்னும் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை, இதனால் தற்போது இப்படத்தின் 2வது பாடலின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. “அய்யயோ அம்மாடி” என்ற இந்த பாடல், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டிசி படத்தின் மீது வைத்த நம்பிக்கை… கலாநிதி மாறனை சந்தித்து நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

சிக்மா படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சிக்மா படமானது 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தேதிக்கு சில நாட்களுக்கு முன்புதான் முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியது. ஆனால் புது ரிலீஸ் எப்போது என இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் இப்படத்தய் 2026ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us