Suriya: அனைவரின் இதயத்திலும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கும்.. விஸ்வநாத் & சன்ஸ் குறித்து சூர்யா பேச்சு!
Suriya on Vishwanath & Sons: தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ். சமீபத்தில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்க்கும்போது எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, கொண்டாடப்படும் நாயகனாக இருப்பவர் சூர்யா (Suriya). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் பணியாற்றிவருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath and Sons). இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ள. இப்படம் ஆரம்பத்தில் சூர்யா46 (Suriya46) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Aturi) இப்படத்தை இயக்க, தயாரிப்பாள நாக வம்சி (Naga Vamsi) இப்படத்தை தயாரித்துவந்தார். இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் சமீபத்தில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, அதில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இப்படத்திற்கு இவர் முதல் விமர்சனமாகவே தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: பேக் இன் ஆக்ஷன்.. சிறப்பாக தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட அடுத்த செட்யூல் ஷூட்டிங்!
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து சூர்யா பேச்சு:
அந்த பேட்டியில் பேசிய சூர்யா, “விஸ்வநாத் & சன்ஸ் படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் சிறிய புன்னகை முகத்தில் இருந்தவாறே இருக்கும். இப்படத்தில் அழகான வேடங்கள் மற்றும் சிறப்பான கதாபாத்திரங்கள் பல இருக்கிறது. அழகான தருணங்கள் மற்றும் மறக்க முடியாத வசனங்களைக் கொண்ட அரிதான படங்களில் ஒன்றாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இருக்கும். எனக்கு தெரிந்து, எனது நம்பிக்கையில், இப்படத்தய் திரையரங்குகளில் பார்க்கும் அனைவரின் இதயத்திலும் ஒரு இடத்தை பிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லிவ் இன் ரிலேஷனில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை.. உண்மையை உடைத்த பிரபலம்!
விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து சூர்யா பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
#Suriya about #VAS
– #VishwanathAndSons feels like one of those rare films with a refreshing romance, beautiful moments, and memorable dialogues ✨️
– Once audiences experience it, it will spark new conversations and find a special place in everyone’s heart ❤️…— Movie Tamil (@_MovieTamil) August 10, 2026
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பிரபலங்களும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கருப்பு படத்திற்கு பின் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.